Published : Apr 22, 2025, 11:08 AM ISTUpdated : Apr 22, 2025, 11:14 AM IST
தமிழ்நாட்டில் ரேஷன் கடை ஊழியர்கள் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 3 நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ரேஷன் பொருள் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Ration Shop Employees Strike: தமிழ்நாட்டில் 34,790 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. சுமார் 33,000 கடைகள் நேரடியாக கூட்டுறவு துறை மூலம் நடத்தப்படுகிறது. இதில் 2 கோடியே 29 லட்சம் குடும்ப அட்டை தாரர்கள் உள்ளனர். இந்த அட்டை உள்ளவர்களுக்கு ரேஷன் கடைகளில் அரிசி, சக்கரை, பாமாயில், கோதுமை உள்ளிட்ட உணவுப்பொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் சுமார் 7 கோடி பயனாளிகள் பயன் பெறுகின்றனர். இந்த ரேஷன் கடைகளில் கிட்டத்தட்ட 75 ஆயிரம் பணியாளர்களும் மற்றும் கூட்டுறவு அமைப்புகள் உள்ளிட்டவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.
24
Ration Shop Staff Begin Strike in Tamil Nadu
ரேஷன் கடை ஊழியர்கள் 3 நாட்கள் வேலை நிறுத்தம்
இந்நிலையில் ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருட்களை பாக்கெட்டில் வழங்குவது, ஊழியர்களுக்கு கல்வித் தகுதி அடிப்படையில் சம்பளம் வழங்குவது உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் 24ம் தேதி வரை அதாவது 3 நாட்கள் மாநிலம் முழுவதும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழக அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் அறிவிப்பை வெளியிட்டனர். இதனால் ரேஷன் பொருள் விநியோகம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது.
இந்நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ரேஷன் ஊழியர்களுக்கு சம்பள பிடித்தம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு கூட்டுறவு சங்க பதிவாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ரேஷன் பணியாளர்களுக்கு No Work No Pay என்ற அடிப்படையில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும்.
போராட்டத்தில் ஈடுபடுவர்கள் விவரங்கள் கேட்கும் அரசு
வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் ரேஷன் பணியாளர்களின் விவரங்களை பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் போராட்டத்தில் ஈடுபடும் பணியாளர்களுக்கு பதிலாக உரிய மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும். ரேஷன் பொருள் விநியோகத்தில் எவ்வித இடர்பாடும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.