மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சட்டசபையில் வெளியான முக்கிய அறிவிப்பு

Published : Apr 22, 2025, 10:31 AM ISTUpdated : Apr 22, 2025, 05:41 PM IST

மதுராந்தகம் தொகுதியில் சார்நிலை கருவூலத்திற்கு புதிய கட்டிடம் கட்டப்படும் என நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உறுதியளித்துள்ளார். மேலும், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த அரசின் நிலைப்பாட்டையும் அவர் விளக்கியுள்ளார்.

PREV
14
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.? அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு சட்டசபையில் வெளியான முக்கிய அறிவிப்பு

Old Pension Scheme Tamilnadu Government : சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு தொகுதி கோரிக்கைகளை கேள்வியாக எழுப்பினர். இதற்கு அமைச்சர்கள் பதில் அளித்தனர். அந்த வகையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், மதுராந்தரகம் தொகுதியில் சார்நிலை கருவூலத்தில் உள்ள காலிப்பணியிடம் நிரப்ப வேண்டும், வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது. இதற்கு மாற்றாக சொந்த கட்டிடம் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

24
Tamilnadu assembly

மதுராந்தகத்தில் சார்நிலை கருவூலம்

இதற்கு பதில் அளித்த நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, சார்நிலை கட்டிடம் பழைய கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது வாடகை இயங்கி வருகிறது. எனவே இந்த ஆண்டே மதுராந்தகம் பகுதியில் கரூவூலத்திற்கு கட்டடம் கட்டப்படும், கூடுதல் ஊழியர்கள் நிரப்பப்படும் என தெரிவித்தார்.  

இதனை தொடர்ந்து துணை கேள்வி எழுப்பிய சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், தமிழக அரசு ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வதிட்டம் அமல்படுத்தப்படுமா கேட்டார். இதற்கு பதிலளித்து பேசிய நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு,

34
old pension scheme Thangam Tennarasu

அரசு ஊழியர்களின் கோரிக்கை

தமிழக முதலமைச்சர் அரசு ஊழியர்கள் நலனின் மிகுந்த அக்கறையோடு அரசு செயல்பட்டு வருவதாகவும், தொடர்ந்து ஊழியர்களின் கோரிக்கைகளை மிகுந்த கவனத்தோடு பரீசிலித்து உள்ளது.  நிதி நிலை அறிக்கையில் கூட அரசு ஊழியர்களுக்கு தேவையான எதிர்பார்த்திருந்த அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தேன். 

தொடர்ந்து அவர்களுக்கு கோரிக்கை உள்ளது. ஓய்வூதியத்தை பொறுத்தவரையிலும் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவின் தலைவராக ககன் தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த குழுவின் காலவரையரை நியமிக்கப்பட்டுள்ளது.

44
old pension scheme

பழைய ஓய்வூதிய திட்டம்

அந்த குழுவிற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்துள்ளதாக கூறிய அவர், பொதுப்பணித்துறை அமைச்சரும் நானும் அந்த குழுவின் தலைவரோடு கலந்து பேசியுள்ளோம். தமிழக முதலமைச்சரும் அரசு ஊழியர்களின் கோரிக்கையை மிகுந்த கவனத்தோடு கருத்தில் எடுக்கொண்டுள்ளார்.  முதலமைச்சரிடம் பேசி குழுவில் விவாதித்து உரிய நேரத்தில் சரியான முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார். 

Read more Photos on
click me!

Recommended Stories