ராஜ்யசபா எம்.பியாகும் அண்ணாமலை.? எந்த மாநிலத்தில் இருந்து தெரியுமா.?

Published : Apr 22, 2025, 09:44 AM IST

 அண்ணாமலையை பாஜக மாநில தலைவர் பதவியில் இருந்து நீக்கிய நிலையில், தற்போது அண்ணாமலைக்கு மாநிலங்களவை சீட் வழங்க பாஜக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்ததாக மத்திய அமைச்சரவையில் இடம் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

PREV
15
ராஜ்யசபா எம்.பியாகும் அண்ணாமலை.? எந்த மாநிலத்தில் இருந்து தெரியுமா.?

BJP plans to nominate Annamalai as Rajya Sabha MP : தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சுமார் 10 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையை திரைமறைவில் இருந்து வெளிப்படையாக தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுகவை வீழ்த்த அதிமுக பலம் வாய்ந்த கூட்டணியை அமைக்க திட்டமிட்டது. அந்த வகையில் பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து தேர்தல் களத்தில் இறங்க காய் நகர்த்தி வருகிறது. இதன் முதல் படியாக டெல்லி சென்ற அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி,

25
Admk Bjp alliance

அதிமுக- பாஜக கூட்டணி

பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அமித்ஷாவை சந்தித்து கூட்டணி தொடர்பாக ஆலோசித்தார். இதனையடுத்து தமிழகம் வந்த அமித்ஷா அதிமுக- பாஜக கூட்டணி என உறுதி செய்தார். அதே நேரம் அதிமுக தலைவர்களுக்கும், பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலைக்கும் செட் ஆகாமல் இருந்து வந்தது. ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர். மேலும் இனி அதிமுகவுடன் கூட்டணியே இல்லை. அப்படி கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என அண்ணாமலை அறிவித்திருந்தார்.

35
Annamalai BJP

மாநில தலைவர் பதவியில் இருந்து அண்ணாமலை மாற்றம்

இதற்கு ஏற்றார் போல அதிமுகவுடன் கூட்டணி உறுதியான நிலையில் அண்ணாமலையை மாற்றி அதிமுகவுடன் அனுசரித்து போகும் மாநில தலைவரை நியமிக்க திட்டமிட்டது. இதனையடுத்து முன்னாள் அதிமுக அமைச்சரும், தற்போது பாஜக எம்எல்ஏவாக உள்ள நயினார் நாகேந்திரனை பாஜக தலைவராக நியமிக்கப்பட்டார். 

அதே நேரம் அண்ணாமலையின் செயல்பாடுகளை பாராட்டிய அமித்ஷா தேசிய அளவில் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். அந்த வகையில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. அடுத்தாக மத்திய அமைச்சராக அண்ணாமலை நியமிக்கப்படலாம் எனவும் தகவல் வெளியானது

45
annamalai bjp

ராஜ்யசபா எம்பியாகும் அண்ணாமலை

தனை உறுதிப்படுத்தும் வகையில், முதல் கட்டமாக அண்ணாமலையை மாநிலங்களவைக்கு தேர்வு செய்ய பாஜக தலைமை திட்டமிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மாநிலங்களவை தேர்தலில் அண்ணாமலை களத்தில் இறக்க திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக அண்ணாமலையை தேர்ந்தெடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

 

55
Annamalai Rajya Sabha MP

மத்திய அமைச்சரவையில் இணையும் அண்ணாமலை

இதற்காக பாஜக தேசிய தலைமை, ஆந்திராவில் ஆளுங்கட்சியாக உள்ள தெலுங்கு தேசம் கட்சியுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது. இதில் உடன்பாடு ஏற்படும் பட்சத்தில் அண்ணாமலை ஆந்திர மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்படக்கூடும். அடுத்ததாக மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கும் போது அண்ணாமலைக்கு அமைச்சரவை பொறுப்பு வழங்கப்படும் என தகவல் கூறப்படுகிறது. 

Read more Photos on
click me!

Recommended Stories