TN Weather Update: தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று 9 மாவட்டங்களில் வெயில் சதம் அடித்தது. அதாவது கரூரில் 103.1 டிகிரி, மதுரை மற்றும் திருச்சியில் 102.3 டிகிரி, சேலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் 102.2 டிகிரி, ஈரோடு 101.8 டிகிரி, வேலூர் 101.4 டிகிரி, தர்மபுரி மற்றும் திருத்தணியில் 100.4 டிகிரி என 9 மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்தது.