மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மாணவன்.! காப்பாற்றிய இளைஞருக்கு எதிர்பாரா பரிசளித்த இபிஎஸ்

Published : Apr 22, 2025, 08:48 AM ISTUpdated : Apr 22, 2025, 08:50 AM IST

சென்னை அரும்பாக்கத்தில் மழைநீரில் மின்சாரம் பாய்ந்தபோது, மூன்றாம் வகுப்பு மாணவன் ஒருவன் மின்சாரம் தாக்கி விழுந்தான். அப்போது கண்ணன் என்ற இளைஞர் தனது உயிரைப் பணயம் வைத்து சிறுவனைக் காப்பாற்றினார். இதற்காக அதிமுக சார்பில் அவருக்குப் பரிசு வழங்கப்பட்டது.

PREV
14
மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடிய மாணவன்.! காப்பாற்றிய இளைஞருக்கு எதிர்பாரா பரிசளித்த இபிஎஸ்

EPS felicitates youth who saved electrocuted student : சென்னையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திடீரென கோடை மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் தண்ணீர் தேங்கியது. அந்த வகையில் சென்னை அரும்பாக்கம் பகுதியிலும் தண்ணீர் தேங்கியது. அப்போது பள்ளி முடித்து வீட்டிற்கு  3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் ரேகன் திரும்பி கொண்டிருந்தான்.

அப்போது தண்ணீர் தேங்கியிருந்த பகுதியில் உள்ள மின்சார ஜங்ஷன் பெட்டியில் இருந்து மின்சாரம் தண்ணீரில் பாய்ந்துள்ளது. இதனை எதிர்பாராத சிறுவன் தண்ணீரில் நடந்த போது மின்சாரம் மாணவன் மீது தாக்கியுள்ளது. இதில் சுயநினைவின்றி  தண்ணீரிலேயே மாணவன் விழுந்தான்.

24
Boy electrocuted

மாணவனை காப்பாற்றிய இளைஞர்

அப்போது அந்த பகுதியில் வந்த நபர்கள் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த நிலையில், கண்ணன் என்ற இளைஞர் தனது உயிரைக்கூட பொருட்படுத்தாமல் உடனடியாக அந்த மாணவனை அங்கிருந்து இழுத்து காப்பாற்றினார். இந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவிய நிலையில், அந்த இளைஞர் கண்ணனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. ரியல ஹிரோ என சமூகவலைதளத்தில் பாராட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக இளைஞர் கண்ணன் கூறும்போது, சிறுவனை காப்பாற்றும் போது மின்சாரம் என்னையும் தாக்கியது, சிறுவனை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தால் உயிரை பணயம் வைத்தேன் என கூறினார்.

34
Arumbakkam boy electrocuted

இளைஞருக்கு குவியும் பாராட்டு

இந்தநிலையில் மாணவனை காப்பாற்றிய இளைஞருக்கு அதிமுக சார்பாக பரிசு அளித்து பாராட்டப்பட்டுள்ளது.  அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த 16.4.2025 அன்று. சென்னை, அரும்பாக்கம் பகுதியில் தேங்கி நின்ற மழை நீரில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்தபோது,

அவ்வழியாக வந்த ரேகன் (வயது 8) என்ற 3-ம் வகுப்பு மாணவன், தண்ணீரில் காலை வைத்தவுடன் மின்சாரம் தாக்கி, உயிருக்கு ஆபத்தான நிலையில் துடித்துக்கொண்டிருந்தார்.

44
Aiadmk appreciation

தங்க மோதிரம் பரிசளித்த இபிஎஸ்

அப்போது அவ்வழியே வந்த, தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் தஞ்சாவூர், ஒரத்தநாட்டைச் சேர்ந்த தா. கண்ணன் என்ற இளைஞர் உடனடியாக அச்சிறுவனைக் காப்பாற்றினார். தன் உயிரைத் துச்சமென மதித்து அச்சிறுவனைக் காப்பாற்றிய இளைஞரின் துணிவைப் பாராட்டி, அதிமுக பொதுச் செயலாளரும்,

சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி K. பழனிசாமி, அந்த இளைஞர் தா. கண்ணனை  தனது இல்லத்திற்கு நேரில் வரவழைத்து அவரது துணிவைப் பாராட்டி, அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்து வாழ்த்தினார்.

Read more Photos on
click me!

Recommended Stories