தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த இடங்களில் பவர் கட் தெரியுமா?

Published : Apr 22, 2025, 08:05 AM ISTUpdated : Apr 22, 2025, 08:08 AM IST

மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்படும் என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

PREV
14
தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த இடங்களில் பவர் கட் தெரியுமா?
Tamil Nadu electricity

 Power cut in Tamil Nadu Today: மின்சாரம் இல்லாத காலம்போய் தற்போது கொஞ்சம் நேரம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடிவதில்லை. சிறிது நேரம் மின்தடை ஏற்பட்டலே போதும் உடனே மின்வாரியத்துக்கு போன் செய்து எப்போது கரண்ட் வரும் கேட்கும் சூழல் நிலவி வருகிறது. அதுவும் கோடைக்காலம் தொடங்கிவிட்டதால் சொல்லவே வேண்டாம். கடுமையான வெயில் வாட்டி வதைப்பதால் மின்தேவையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அப்படி இருந்த போதிலும் சீரான மின்விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. 

24
Maintenance Work

மாதாந்திர பராமரிப்பு மணி

இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மற்றும் வேறு பணிகள் காரணமாக மின் தடை செய்யப்படுவது வழக்கம். அன்றைய தினம் பழுதுகளை சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற தகவலை மின்சார வாரியம் வெளியிட்டுள்ளது. 

இதையும் படிங்க: அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை! வெளியான முக்கிய அறிவிப்பு! இல்லைனா நடவடிக்கை தான்!

34
Salem Power cut

சேலம் மாவட்டம்

வேப்பிலைப்பட்டி, திருமனூர், முத்தம்பட்டி, சென்றாயன்பாளையம், வெள்ளாளகுண்டம், காட்டு வேப்பிலைப்பட்டி, கவர்கல்பட்டி, காமராஜபுரம் அம்மாபேட்டை காலனி, அம்மாபேட்டை உழவர் சந்தை, எம்ஜிஆர் நகர், கே.என்.காலனி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை எற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

44
Villupuram power cut

விழுப்புரம் மாவட்டம்

ரெட்டிக்குப்பம், பொம்பூர், மண்டபம், சிந்தாமணி, அய்யூர்அகரம், பனையபுரம், கப்பியாம்புலியூர், பொன்னங்குப்பம், கயத்தூர், வி.சாத்தனூர், ஆவுடையார்பட்டு, ஆசூர், மேலக்கொந்தை, சின்னதச்சூர், கொங்கராம்பூண்டி, கொட்டியாம்பூண்டி, வடகுச்சிப்பாளையம் ஆகிய இடங்களில்  காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories