அடிப்படை தேவையாக ரேஷன் கார்டு
இந்தநிலையில் தமிழக அரசு சார்பாக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டங்களில் பயன் பெற ரேஷன் கார்டு முக்கிய தேவையாக உள்ளது. அந்த வகையில் மகளிர் உரிமை தொகை, மாணவர்களுக்கு சாதி சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், 100 நாள் வேலைக்கான பணி அட்டை ஆகியவற்றை பெறுவதற்கும், வங்கிக் கணக்கு தொடங்குவதற்கும் குடும்ப அட்டை கட்டாயமாகும் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.
இது மட்டுமில்லாமல் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசால் வழங்கப்படும் பரிசு தொகைப்பை பெறுவதற்கும், மழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்படுகின்ற நேரத்தில் நிதி உதவி மற்றும் நிவாரண பொருட்கள் பெறுவதற்கும் கட்டாயமாகும். குறிப்பாக மகளிர் உரிமை தொகையாக மாதம் ஆயிரம் ரூபாய் பெறுவதற்கு குடும்ப அட்டை முக்கிய தேவையாக உள்ளது. இதனையடுத்து தான் ஒரே நேரத்தில் 2,89,591 மக்கள் விண்ணப்பித்திருந்தனர்.