செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை
தமிழக அரசியலில் அதிமுகவிலும்- திமுகவிலும் முக்கிய மட்டுமில்லாமல் பவர் புல் போஸ்டிங்கில் இருந்தவர் செந்தில் பாலாஜி, தனது அரசியல் வாழ்க்கையை மதிமுகவில் தொடங்கி தற்போது திமுகவில் உள்ளார். கரூர் மாவட்டத்தில் ராமேஸ்வரப்பட்டி என்னும் கிராமத்தில் பிறந்த வி. செந்தில்குமார் தனது பெயரை செந்தில் பாலாஜி என மாற்றிக்கொண்டார். 1994ஆம் ஆண்டு மதிமுக-வில் அரசியல் பயணத்தை தொடங்கிய செந்தில் பாலாஜி 1996ல் திமுக-வில் இணைந்தார். இதனையடுத்து ஒரு சில ஆண்டுகளில் அதிமுக பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். அடுத்த சில மாதங்களிலையே செந்தில் பாலாஜியின் அரசியல் வாழ்க்கை உயர தொடங்கியது.
யார் இந்த செந்தில் பாலாஜி..? அரசியலில் நுழைந்து அமைச்சரானது எப்படி.? கடந்து வந்த பாதை...
மதிமுக, திமுக, அதிமுக, திமுக
ஆரம்பத்தில் கரூர் மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர், கரூர் மாவட்ட மாணவர் அணிச் செயலாளர், மாவட்ட ஜெயலலிதா பேரவைச் செயலாளர், கரூர் மாவட்ட அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் என உயர்ந்தவர் ஜெயல்லிதாவின் நம்பிக்கைக்குரிய தலைவராக திகழ்ந்தார்.இதனையடுத்து நடைபெற்ற 2006ஆம் ஆண்டுசட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றார். இதனையடுத்து மீண்டும் 2011ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டவர் வெற்றி பெற்று அமைச்சர் பதவியையும் பிடித்தார்.
அப்போது தான் போக்குவரத்து துறை அமைச்சர் பதவியானது வழங்கப்பட்டது. ஜெயலலிதா அமைச்சரவையில் முக்கிய அமைச்சராகவும், செல்லப்பிள்ளையாகவும் இருந்து வந்தார். ஒரு கட்டத்தில் செந்தில் பாலாஜி மீது அதிமுக தலைமைக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இருந்த போதும் 2016ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது.
திமுகவிற்கு தாவிய செந்தில் பாலாஜி
அப்போது அதிகளவு பணப்பட்டுவாடா காரணத்தால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது. இருந்த போதும் ஒரு சில மாதங்களுக்கு பிறகு மீண்டும் தேர்தல் நடைபெற்றது. அப்போது போட்டியிட்டவர் வெற்றி பெற்றார். ஆனால் செந்தில் பாலாஜி தேர்தலில் போட்டியிட்ட போது ஜெயலலிதா உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கான கையொப்பத்தில் குறைபாடு இருந்ததால் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட உட்கட்சி மோதல் காரணமாக டிடிவி தினகரன் அணிக்கு ஆதரவாக செயல்பட்டவர், கடந்த 2018ஆம் ஆண்டு திமுகவில் இணைந்தார். அப்போது நடைபெற்ற சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி திமுக சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.
senthil balaji
செந்தில் பாலாஜி சொத்து மதிப்பு என்ன.?
இதனையடுத்து 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் களம் இறங்கியவருக்கு மின்சாரத்துறை மட்டுமில்லாமல் மதுவிலக்கு துறையும் ஒதுக்கப்பட்டது. திமுக தலைமையிடம் மிகவும் நெருக்கமாக செந்தில் பாலாஜி திகழ்ந்தார். அப்போது தான் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி சுமார் ஒராண்டுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்டார். 471 நாட்களுக்கு பிறகு ஜாமின் கிடைத்த நிலையில் இன்று புழல்சிறையில் இருந்து செந்தில் பாலாஜி வெளியே வருகிறார்.
இதனிடையே செந்தில் பாலாஜியின் சொந்து மதிப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் படி, கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அவர் தாக்கல் செய்த சொத்து பத்திரத்தில், தனது பெயரில் 97,93,067 ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்கள் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் 11.56 லட்ச ரூபாய் மதிப்பிலான சொகுசு காரான ஃபார்ச்சூனர் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
கார் மற்றும் துப்பாக்கி
மேலும் 11 லட்சத்து 62ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இனோவா கார் உள்ளதாகவும், 1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்பிலான டெம்போ டிரக்கும் தனது பெயரில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது பெரியலில் ஒரே அசையாத சொத்து ஆத்தூர் கிராமத்தில் இருக்கும் 3.59 ஏக்கர் விவசாய நிலம் மட்டுமே என தெரிவித்துள்ளார். 2021ஆம் ஆண்டின் போது இதன் மதிப்பு தோராயமாக 1.1 கோடி ரூபாய் என குறிப்பிட்டுள்ளார். மேலும் 85,000 ரூபாய் மதிப்பிலான ஒரு கைத்துப்பாக்கி இருப்பதாகவும் செந்தில் பாலாஜி தனது சொத்து விவரத்தை தெரிவித்துள்ளார்.