Ration Card: 2 கோடி ரேஷன் கார்டுகள் நீக்கம்! உங்க கார்டு கேன்சல் ஆகாம இருக்க இதை செய்யுங்க!

Published : Jun 19, 2026, 02:23 PM IST

Ration Card: இந்தியாவில் தகுதியற்ற 2.2 கோடி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உங்க ரேஷன் கார்டு கேன்சல் ஆகாம இருக்க என்ன செய்ய வேண்டும்? என விரிவாக பார்க்கலாம். 

PREV
14
இந்தியாவில் தகுதியற்ற 2.21 கோடி ரேஷன் கார்டுகள் நீக்கம்

இந்தியாவில் ஏழை, எளிய மக்களுக்கு ரேஷன் கடைகள் வாழ்வாதாரமாக உள்ளன. நமது தமிழ்நாட்டிலும் ரேஷன் கடைகள் மூலம் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசின் நலத்திட்டங்களை பெறவும் ரேஷன் கார்டுகள் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்த நிலையில், நாடு முழுவதும் தகுதியற்ற 2.21 கோடி ரேஷன் கார்டுகள் நீக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

24
மத்திய அரசு விளக்கம்

மத்திய அரசின் ‘ஸ்மார்ட் கிடங்கு’ (Smart Warehousing System) திட்டத்தை நேற்று தொடங்கி வைத்துப் பேசிய அமைச்சர் பிரகலாத் ஜோஷி, 'மத்திய உணவு அமைச்சகம் பல்வேறு தொழில்நுட்பத் தரவுகளின் அடிப்படையில் சந்தேகத்திற்குரிய 8.51 கோடி கார்டுகளின் பட்டியலை மாநில அரசுகளுக்கு அனுப்பியிருந்தது. 

அதை அடிப்படையாக வைத்து மாநில அரசுகள் தங்களின் சொந்த அளவுகோல்களின்படி கள ஆய்வு நடத்தி, தகுதியற்ற 2.21 கோடி கார்டுகளை நீக்கியுள்ளன. தகுதியானவர்களுக்கு மட்டுமே இலவச உணவு தானியங்கள் சென்றடைவதை நோக்கமாக கொண்டே தகுதியற்ற ரேஷன் கார்டுகள் நீக்கப்படுகின்றன. தற்போது நாடு முழுவதும் 79 கோடி கார்டுதாரர்கள் உள்ளன'' என்று கூறினார்.

34
எதன் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் நீக்கப்படுகின்றன?

மத்திய, மாநில அரசுகள் டிஜிட்டல் முறையைப் பயன்படுத்தி தகுதியற்ற கார்டுகளைக் கண்டறிந்து வருகின்றன. அந்த வகையில் குடும்பத்தில் யாராவது இறந்திருந்தாலோ அல்லது திருமணம் ஆகி வேறு இடத்திற்குச் சென்றிருந்தாலோ அவர்களின் பெயர்களை நீக்காமல் தொடர்ந்து ரேஷன் வாங்கினால் அந்த கார்டுகள் நீக்கப்படுகின்றன.

நல்ல பொருளாதார நிலை இருந்து வருமான வரி செலுத்துபவர்கள், சொந்தப் பயன்பாட்டிற்காக கார் போன்ற 4 சக்கர வாகனங்களை வைத்திருக்கும் குடும்பங்கள், ஒரே நபரின் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகளில் இடம் பெற்றிருப்பது ஆகியவற்றின் அடிப்படையில் ரேஷன் கார்டுகள் நீக்கப்படுகின்றன. தமிழகத்திலும் தகுதியற்ற ரேஷன் கார்டுகளை நீக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

44
ரேஷன் கார்டுகள் கேன்சல் ஆகாமல் இருக்க என்ன செய்யணும்?

e-KYC சரிபார்ப்பு: ரேஷன் கார்டுகளில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் விரல் ரேகை அல்லது விழித்திரை விபரங்கள் (e-KYC) நியாயவிலைக் கடைகளில் சரியாக புதுப்பிக்கப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.

ஆதார் இணைப்பு: குடும்பத்தில் உள்ள அனைவரின் ஆதார் எண்களும் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமாகும்.

பெயர் நீக்கம்/சேர்த்தல்: குடும்பத்தில் யாரேனும் இறந்திருந்தால் அல்லது பெண்களுக்குத் திருமணம் ஆகியிருந்தால் அவர்களின் பெயரை கார்டில் இருந்து முறைப்படி நீக்கிவிடுங்கள். அதேபோல், புதிதாகப் பிறந்த குழந்தைகளின் பெயர்களைச் சேர்த்துக் கொள்வதும் முக்கியமாகும்.

தவறாமல் ரேஷன் வாங்க வேண்டும்: தொடர்ந்து சில மாதங்கள் ரேஷன் பொருட்கள் எதுவும் வாங்காமல் இருந்தால், அந்த கார்டு 'செயல்படாத கார்டு' (In-active Card) பட்டியலுக்கு செல்ல வாய்ப்பு உள்ளது. ஆகவே இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையாவது ரேஷன் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்கி விடுங்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories