தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000-லிருந்து ரூ.2,500 ஆக உயர்த்தப்பட உள்ள நிலையில் அது எப்போது கிடைக்கும் என்ற செய்தி வெளியாகியுள்ளது. உயர்த்தப்பட்ட தொகை ஜூலை 15 முதல் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படலாம் என்றும் தகவல்கள் பரவி வருகின்றன.
பெண்கள் ஆவலோடு எதிர்பார்த்து கொண்டு இருக்கும் செய்தி குறித்த புதிய அப்டேட் கிடைத்துள்ளது. ஆமாங்க தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகையாக ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்ற செய்தியும், அது தொடர்பான அறிவிப்பு எப்போது வரும் என்பது பற்றியும் புதிய செய்தி கிடைத்துள்ளது. இது பெண்களை சந்தோஷப்படுத்தும் என்றால் அதுமிகையல்ல.
26
ஜூன் 22-ல் முக்கிய அறிவிப்பு வருமா?
தமிழக முதலமைச்சரின் பிறந்தநாளான ஜூன் 22-ஆம் தேதியை முன்னிட்டு பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் முக்கியமாக, மகளிர் உரிமைத்தொகையை ரூ.1,000-இல் இருந்து ரூ.2,500 ஆக உயர்த்தும் தேர்தல் வாக்குறுதியை அரசு நிறைவேற்றும் என்ற பேச்சு அரசியல் வட்டாரங்களில் வலுத்து வருகிறது. இதுபோன்ற அறிவிப்பு வெளியானால், அது லட்சக்கணக்கான பெண்களுக்கு முதல்வரின் பிறந்தநாள் பரிசாக அமையும் என்றும் கூறப்படுகிறது.
36
ஜூலை 15-ம் தேதி ரூ.2,500 வருமா?
இந்த தகவல்களுடன் சேர்த்து, ஜூலை மாதம் 15-ஆம் தேதி முதல் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,500 நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. மாதந்தோறும் 15-ஆம் தேதி உரிமைத்தொகை வரவு வைக்கும் நடைமுறையைத் தொடர்ந்து, உயர்த்தப்பட்ட தொகையும் அதே தேதியில் வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ரூ.2,500 திட்டம் அமலுக்கு வந்தால், தற்போது மகளிர் உரிமைத்தொகை பெற்று வரும் தகுதியான பயனாளிகள் தானாகவே புதிய தொகையைப் பெறுவார்களா அல்லது புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்படுமா என்பது குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டியுள்ளது. அதேபோல், புதிய விண்ணப்பங்கள் பெறப்படுமா, தகுதிகளில் மாற்றம் இருக்குமா என்பதும் அறிவிப்புக்குப் பிறகே தெளிவாகும்.
56
வங்கி கணக்கு விவரங்களை சரிபாருங்கள்
பணம் நேரடியாக வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதால், ஆதார் இணைப்பு, வங்கி கணக்கு செயல்பாட்டில் உள்ளதா, மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதா போன்ற விவரங்களை பயனாளிகள் முன்கூட்டியே சரிபார்த்து வைத்துக் கொள்வது நல்லது. ஏற்கனவே உரிமைத்தொகை பெற்று வருபவர்களும் தங்களின் கணக்கு விவரங்களில் பிழைகள் இல்லையா என்பதை உறுதி செய்து கொள்ளலாம்.
66
அதிகாரப்பூர்வ அறிவிப்பே இறுதி
ரூ.2,500 உரிமைத்தொகை குறித்த தகவல் சமூக வலைதளங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தாலும், இதுவரை தமிழக அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. எனவே, ஜூன் 22 அல்லது அதன்பிறகு அரசு வெளியிடும் அறிவிப்பையே இறுதியான தகவலாக கருத வேண்டும். அதிகாரப்பூர்வ உத்தரவு வெளியான பிறகே தொகை, வழங்கும் தேதி, தகுதி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் உறுதியாகும். தற்போதைக்கு ரூ.2,500 உயர்வு மற்றும் ஜூலை 15-ஆம் தேதி வரவு தொடர்பான தகவல்கள் எதிர்பார்ப்பாக மட்டுமே உள்ளன; அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்க வேண்டும்.