அரசு மருத்துவமனையில் குவிந்து கிடக்கும் வேலை.! 8ஆம் வகுப்பு டூ டிகிரி போதும்- சம்பளம் எவ்வளவு தெரியுமா.?

First Published Sep 15, 2024, 8:05 AM IST

ராமநாதபுரம் மாவட்டத்தில் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், சுகாதார ஆய்வாளர், தூய்மை பணியாளர் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 24ஆம் தேதி மாலை 5 மணி.

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

தமிழக அரசு சார்பாக பல்வேறு வேலை வாய்ப்பு முகாம்கள் மற்றும் சொந்த தொழிலுக்கு பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், பிரபல தனியார் நிறுவனமான டாடா நிறுவனத்தோடு இணைந்து தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்பு முகாம் அலுவலகத்தின் மூலம் பணியாளர்கள் தேர்வு நடைபெற்றது. இதற்காக ஆயிரக்கணக்கான நபர்கள் நேரடியாக தேர்வு செய்யப்பட்டனர். இதனையடுத்து அரசு வேலையில் இணைய ஆர்வமாக உள்ளவர்களுக்கு தமிழக அரசு சார்பாக கல்வித்துறை வல்லுநர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் அரசு மருத்துவமனையில் வேலைவாய்ப்பும் ஏற்படுத்தப்படுகிறது. ஒரு சில இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர் தேர்வு நடைபெறுகிறது. 

ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம்

தமிழக அரசின் சுகாதாரத்துறையில் காஞ்சிபுரம் மற்றும் சென்னை மாவட்டங்களில் ஒப்பந்த பணியிடங்கள் நிரப்பப்பட அழைப்பு விடுக்கப்பட்டது. குறிப்பாக மருத்துவர், செவிலியர், சுகாதார பணியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் தற்போது நடைபெற்று வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் தேர்வு நடைபெறவுள்ளது. இதற்காக விண்ணப்பிக்க மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். 

Latest Videos


ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு

ராமநாதபுரம் மாவட்ட மருத்துவ நலச்சங்கம் சார்பாக பணியாளர் தேர்வு நடைபெறுகிறது. ராமநாதபுரம் மற்றும் பரமக்குடி சுகாதார மாவட்ட அலுவலகம் மற்றும் அதன் கீழ் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், நலவாழ்வு மையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படுகிறது. டேட்டா எண்டரி ஆப்ரேட்டர், சுகாதார ஆய்வாளர், தூய்மை பணியாளர் என 60க்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தேர்வுக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

இலவசமாகவே பார்க்கலாம்.! சென்னை வானத்தில் குட்டிக்கரணம் அடிக்கப்போகுது ரஃபேல், சூகோய், தேஜாஸ்- எப்போ தெரியுமா.?
 

பதவி- காலியிடம்

அந்த வகையில், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் ஒரு பதவியிடத்திற்கும், பிளாக் டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவியிடத்திற்கு 1 இடத்திற்கும்,  இடைநிலை சுகாதார பணியாளர் 21 பணியிடங்களுக்கும், சுகாதார ஆய்வாளர் 13 இடங்களுக்கும்,  2 தூய்மைப் பணியாளர் காலியிடங்களுக்கும், 2 ஓட்டுநர் மற்றும் ஒரு பிசியோதெரபிஸ்ட்    பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தகுதிகள்

தூய்மைப் பணியாளர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி மட்டும் போதும் என கூறப்பட்டுள்ளது.  ஓட்டுநர் பதவிக்கு 8-ம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழோடு  ஓட்டுநர் உரிமம் கட்டாயம் தேவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Medical Camp

தகுதிகள் என்ன.?

இடைநிலை சுகாதார பணியாளர் பணிக்கு  GNM/B.Sc (Nursing) முடித்திருக்க வேண்டும் எனவும், டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு ஏதேனும் ஒரு டிகிரி முடித்திருக்க வேண்டும் எனவும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நன்றாக டைப்பிங் செய்ய தெரிந்திருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.  குறிப்பாக கணினி திறன் அவசியம்.

சுகாதார ஆய்வாளர் பணிக்கு 2 ஆண்டுகள் பயிற்சி படிப்பை பெற்றிருக்க வேண்டும். 10-ம் வகுப்பில் தமிழ் மொழியை ஒரு பாடமாக கொண்டு படித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு இளநிலை பிசியோதெரபிஸ்ட் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

வயது வரம்பு :

இப்பணியிடங்களுக்கு விண்ணப்பதார்கள் 45 வயதிற்கும் மிகாமல் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பள விவரம் :

1. சுகாதார ஆய்வாளர் பதவிக்கு ரூ.14 ஆயிரம் ரூபாயும், தூய்மைப் பணியாளர் பதவிக்கு ரூ.8,500 சம்பளம் 

2. பிசியோதெரபிஸ்ட் பதவிக்கு ரூ.13,5000, ஓட்டுநர் பதவிக்கு 13,500 ரூபாய் மாத சம்பளம் 

3. டேட்டா எண்டரி ஆப்ரேட்டர் பதவிக்கு ரூ.13,500 மாதம் சம்பளம் 

4. இடைநிலை சுகாதார பணியாளர் பதவிக்கு ரூ.18,000 மாத சம்பளமாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

மருத்துவ பணியிடங்களுக்கு ஆர்வமுள்ள மற்றும் தகதியுள்ள நபர்கள்  https://ramanathapuram.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து தபால் வழியாக அனுப்பி வைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்  அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பத்தை அளிக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. 

மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் :

ராமநாதபுரம் மாவட்டத்தில் மருத்துவ பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 24ஆம் தேதி மாலை 5 மணி என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :

இப்பணியிடங்கள் ராமநாதபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கத்தின் வழியாக ஒப்பந்தத்தின் அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமாக நிரப்பப்படவுள்ளது. 

click me!