NDA கூட்டணி மேடையில் மாம்பழம்.. அதிகார துஷ்பிரயோகம்.. பொங்கியெழுந்த ராமதாஸ்.. அன்புமணி பதில் இதுதான்!

Published : Jan 23, 2026, 02:28 PM IST

மதுராந்தகத்தில் NDA கூட்டணி மேடையில் பாமகவின் மாம்பழ சின்னம் பயன்படுத்தப்பட்டதற்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதற்கு அன்புமணி பதில் அளித்துள்ளார்.

PREV
14
NDA கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றி என்டிஏ கூட்டணியில் பிரசாரத்தை தொடங்கி வைக்கிறார். என்டிஏ கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக தலைவர் அன்புமணி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர்.

24
NDA கூட்டணி மேடையில் மாம்பழம் சின்னம்

மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்ட மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களின் புகைப்படங்கள் மற்றும் அவர்கள் கட்சிகளின் சின்னமும் இடம்பெற்றுள்ளன. பாமக என்டிஏ கூட்டணியில் உள்ள நிலையில், பாமக தலைவர் அன்புமணி புகைப்படமும், பாமகவின் மாம்பழம் சின்னமும் புகைப்படங்களாக இடம்பெற்றுள்ளன. பாமகவில் ராமதாஸ், அன்புமணி மோதல் உச்சம் தொட்டுள்ள நிலையில், இருவரும் கட்சியும், சின்னமும் தங்களுக்கே சொந்தம் என பேசி வருகின்றனர்.

34
ராமதாஸ் கடும் கண்டனம்

இது தொடர்பாக ராமதாஸ் தேர்தல் ஆணையம் சென்ற நிலையில், அன்புமணிக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது. இதை எதிர்த்து ராமதாஸ் நீதிமன்றம் சென்றுள்ளார். இந்த நிலையில், NDA கூட்டணி மேடையில் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டதற்கு ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி பங்கேற்க உள்ள பொதுக்கூட்ட மேடையில் மாம்பழம் சின்னம் பயன்படுத்தப்பட்டுள்ளது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் அறமற்ற செயலாகும்.

44
தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது

தேர்தல் ஆணையத்தின் வசம் நிலுவையில் உள்ள சின்னத்தை மேடையில் பயன்படுத்துவது தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிரானது. இதை தான் வன்மையாக கண்டிப்பதாக ராமதாஸ் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

 ராமதாஸ் கண்டனம் தெரிவித்தது குறித்து மதுராந்தகம் பொதுக்கூட்டத்துக்கு வந்த அன்புமணியிடம் செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு அவர், ''இது குறித்து தேர்தல் ஆணையத்தை தான் கேட்க வேண்டும். மாம்பழம் சின்னத்தை நாங்கள் பயன்படுத்த தேர்தல் ஆணையம் எங்களுக்கு அதிகாரம் தந்துள்ளது'' என்று பதில் அளித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories