பாமகவுக்காக அன்புமணி கூட்டணி பேசுவதா..? என்னடா கூத்து இது..? இங்கு நான் தான் எல்லாம்.. ராமதாஸ் கறார்

Published : Jan 08, 2026, 11:24 AM ISTUpdated : Jan 08, 2026, 12:47 PM IST

பாட்டாளி மக்கள் கட்சி என் தலைமையில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், என்னுடைய கட்சிக்காக அன்புமணி எப்படி கூட்டணி பேச முடியும் என அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார்.

PREV
13
அதிமுக கூட்டணியில் அன்புமணி இணைந்திருப்பது கூத்து..!

அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி அமைத்துள்ளதை, தனி மனிதன் ஒரு கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளார். அதனை பாமக கூட்டணி என தெரிவிக்க முடியாதென்று பாமக நிறுவனர் ராமதாஸ் காட்டமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தைலாபுரம் தோட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராமதாஸ், “பாமக நான் ஆரம்பித்த கட்சி. இதற்கு உரிமை கொண்டாட யாருக்கும் அதிகாரம் இல்லை. இரவு பகல் பாராமல் ஓடி ஓடி கட்சியை வளர்த்தவன் நான். நான் செய்த சத்தியத்தை மீறி அன்புமணியை மத்திய அமைச்சராக்கினேன். இறுதியில் அவரே எனக்கு வேட்டு வைப்பார் என்று முன்பே தெரியவில்லை.

23
கட்சியை அபகரிக்க சதி

அவர் செய்த தில்லுமுல்லு வேலைகள் அனைத்தையும் சேர்த்து தான் அவரை இதன் பின்னரும் கட்சியில் வைத்திருக்க முடியாது என்று எண்ணி கட்சியின் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து அவரை கட்சியின் அடிப்படை உட்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கினோம். கட்சியின் தலைவர் பதவியைக் கொடுத்தேன். ஆனால் சூழ்ச்சி செய்து என்னிடமிருந்தே கட்சியை அபகரிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார். அன்புமணிக்கு தலைமைப் பண்பு இல்லை என்பதால் அவரிடம் இருந்து தலைவர் பதவியை பறிக்கவேண்டிய சூழல் உருவானது.

33
அன்புமணியுடன் கூட்டணி அமைத்தால் அது நீதிமன்ற அவமதிப்பு

நான் உருவாக்கி வளர்த்தெடுத்த பலரும் அவர் பின்னால் ஓடிவிட்டனர். அன்புமணியின் துரோகத்தை கட்சியில் உள்ள அனைவரும் புரிந்துகொண்டார்கள். அன்புமணி யாரை, எங்கு நிறுத்தினாலும் அவர்களுக்கு பாமகவினர் வாக்களிக்க மாட்டார்கள். நான் தான் கட்சியின் நிறுவனர், தலைவர். அன்புமணியுடன் யார் கூட்டணி அமைத்தாலும் அது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கையாகவே கருதப்படும். நேற்றைய தினம் நடைபெற்றது ஒரு கூத்து. அதைத் தாண்டி ஒன்றும் இல்லை” என்று காட்டமாக தெரவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories