ராமதாஸ் 5 நாள் ஓய்வு..! நிர்வாகிகள், தொண்டர்களுக்கு பாமக முக்கிய வேண்டுகோள்..!

Published : Oct 08, 2025, 05:04 PM IST

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ராமதாஸ் வரும் 12ம் தேதி வரை ஓய்வு எடுக்க உள்ளதாகவும், அதன்பிறகு அவரை தொண்டர்கள், நிர்வாகிகள் அவரை சந்திக்கலாம் என்றும் பாமக தெரிவித்துள்ளது.

PREV
14
பாமக நிறுவனர் ராமதாஸ்

பாமக நிறுவனர் ராமதாஸ் இதயம் சார்ந்த பிரச்சனைக்கு பரிசோதனை செய்வதற்காக சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராமதாஸ் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு நேற்று வீடு திரும்பினார்.

24
மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ்

அப்போது மருத்துவர்கள் ஓய்வெடுக்க சொன்னார்களா? என செய்தியாளர்கள் கேட்டபோது, 'எனக்கு ஓய்வே கிடையாது' என்று ராமதாஸ் தனக்கே உரித்தான பாணியில் கூறி விட்டு சென்றார். இந்நிலையில் மருத்துவர்களின் அறிவுரைப்படி ராமதாஸ் வரும் 12ம் தேதி ஓய்வு எடுக்க உள்ளதாக பாமக தெரிவித்துள்ளது.

12ம் தேதி வரை ராமதாஸ் ஓய்வு

இது தொடர்பாக பாமக தலைமை நிலையம் வெளியிட்ட அறிவிப்பு: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மற்றும் தலைவர் மருத்துவர் அய்யா அவர்கள் மருத்துவ பரிசோதனை முடிந்து நேற்று (7.10.2025) மாலை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி நலமுடன் வீடு திரும்பியுள்ளார். 

மருத்துவர்கள் ஓய்வெடுக்க வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக் கொண்டதின் பேரில், மருத்துவர்கள் அறிவுறுத்தல் படி 12.10.2025 வரை ஒய்வு எடுக்க உள்ளார்.

34
பாமக தொண்டர்களுக்கு வேண்டுகோள்

எனவே மருத்துவர் அய்யா அவர்களின் பார்வையாளர் சந்திப்பு 12.10.2025 வரை ரத்து செய்யப்படுகிறது. மேலும் மருத்துவர் அய்யாவை சந்திக்க விரும்பும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பார்வையாளர்கள் வருகின்ற 13.10.2025 திங்கள்கிழமை முதல் வழக்கம் போல் தினமும் காலை 10 மணி முதல் 12 மணி வரை நேரடியாக சந்திக்கலாம். 12 மணிக்கு மேல் பார்வையாளர்கள் சந்திப்பு இல்லை என்பதும் அறிவுறுத்தப்படுகிறது.

44
ராமதாஸிடம் நலம் விசாரித்தவர்கள் யார்? யார்?

முன்னதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தகவலை அறிந்ததும் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முதல் ஆளாக அவரை சந்தித்து நலம் விசாரித்தார். 

இதேபோல் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், மநீம தலைவர் கமல்ஹாசன், கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் ஆகியோரும் ராமதாஸிடம் நலம் விசாரித்தனர். 

விசிக தலைவர் திருமாவளவனன் ராமதாஸிடம் போன் மூலம் நலம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories