திமுக பிரமுகரான ரமேஷ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவராக இருந்துள்ளதும் தெரிய வந்தது. தலைமறைவாக இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். இருவர் மீதும், குழந்தைகளை பாலியல் வன்கொடுமை குற்றங்களில் இருந்து பாதுகாக்கும் 'போக்சோ' சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகின்றனர். கோயம்பேடு விடுதியில் அடைத்து வைத்து, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் துணை நடிகர் மற்றும் திமுக நிர்வாகி கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே சினிமா இயக்குநரும், நடிகருமான பாரதி கண்ணன் வீடியோ ஒன்றை வெளியிட்டு, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டது தான் இல்லை என்று கூறியிருக்கிறார்.