இனிமே தான் வெயிலின் ஆட்டமே இருக்காம்.. எச்சரித்த கையோடு மழை குறித்து எதிர்பாராத ட்விஸ்ட்

Published : Mar 11, 2026, 09:57 AM IST

TN Rain: மயிலாடுதுறை, நாகையில் நேற்று திடீரென மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும்.

PREV
16
நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெயில்

தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்த வண்ணம் உள்ளது. வேலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். இதனால் பகல் நேரத்தில் வெளியில் செல்வதற்கே அஞ்சுடுகின்றனர்.

26
நேற்று நாகையில் மழை

நேற்று மயிலாடுதுறை மற்றும் நாகை சுற்றியுள்ள இடங்களில் திடீரென மழை பெய்து குளிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தமிழ்நாட்டில் வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

36
ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது. அதேபோல் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். மற்ற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் தெரிவித்துள்ளது.

46
நீலகிரி, கோவையில் மழை

மேலும் 16ம் தேதி நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

56
சென்னை வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக உயரக்கூடும் என தெரிவித்துள்ளது.

66
அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது (காலை 10 மணி வரை) மூன்று மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது தென்காசி, திருநெல்வேலி, ராமதாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories