கோடையை மிஞ்சும் அளவுக்கு சுட்டெரிக்கும் வெயில்.. மழை குறித்து குளு குளு அப்டேட் வானிலை மையம்!

Published : Feb 23, 2026, 03:50 PM IST

Tamilnadu Weather Update: பகல் நேரங்களில் கோடையை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று மதுரையில் 99 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது.

PREV
16
சுட்டெரிக்கும் வெயில்

தமிழகத்தில் கடந்த ஒரு மாதமாக இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் கடும் பனிமூட்டம் நிலவி வந்தது. அதுமட்டுமல்லாமல் பகல் நேரங்களில் கோடையை மிஞ்சும் அளவுக்கு வெயில் வாட்டி வதைத்து வருகிறது. நேற்று மதுரையில் 99 டிகிரி வெயில் பதிவாகி இருந்தது. இதனால் பொதுமக்கள் வெளியில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். இந்நிலையில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில் மழை குறித்து வானிலை மையம் முக்கிய தகவலை தெரிவித்துள்ளது.

26
காற்றழுத்த தாழ்வு பகுதி

அதாவது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடகிழக்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து அதே பகுதிகளில் நிலவுகிறது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவிழக்கக்கூடும். தெற்கு கேரள கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

36
மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் மழை

இதன் காரணமாக மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதேபோல் நாளை மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

46
பனிமூட்டம்

பிப்ரவரி 25 முதல் 27ம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் மேற்குதொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

பனிமூட்டம் பற்றிய முன்னறிவிப்பு

இன்று மற்றும் நாளை சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என தெரிவித்துள்ளது.

56
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்

சென்னை மற்றும் புறநகர் பகுதிளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

66
மீனவர்களுக்கான எச்சரிக்கை

வங்கக்கடல் பகுதிகள்

இன்று தென்மேற்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

அதேபோல் நாளை தென்கிழக்கு வங்கக்கடலின் வடக்கு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு- மத்தியமேற்கு- மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories