கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் பகல் நேரங்களில் வெளியிலும் இரவு நேரத்தில் மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக கோவை, நீலகிரி, சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை பெய்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது.
24
Tamilnadu Rain
இந்நிலையில், தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதேபோல் சென்னையை பொறுத்த வரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது.
44
Tamilnadu Rain Alert
இந்நிலையில் தமிழகத்தில் கோவை, நீலகிரி, தென்காசி, தேனி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்தில் (அதாவது 10 மணிவரை) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.