அடி தூள்! இனி சென்னை டூ செங்கல்பட்டுக்கு கூடுதல் மின்சார ரயில்கள்! 4வது வழித்தடத்துக்கு ரயில்வே ஒப்புதல்!

Published : Oct 22, 2025, 09:54 PM IST

தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 4வது ரயில் பாதை அமைக்க ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளது. இந்த பாதை அமைக்கப்பட்டால் சென்னை டூ செங்கல்பட்டுக்கு அதிக மின்சார ரயில்களை இயக்க முடியும்.

PREV
14
எப்போதும் பிஸியாக உள்ள வழித்தடம்

தமிழகத்தில் சென்னை-தாம்பரம்-செங்கல்பட்டு-விழுப்புரம் வழித்தடம் எப்போதும் பிஸியாக உள்ளது. தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இருந்து இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் விழுப்புரத்தில் ஒன்றாக இணைந்து இந்த வழித்தடம் வழியாக சென்னை நோக்கி செல்கிறது. இது மட்டுமின்றி சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை தினம்தோறும் மெமு மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

24
தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடம்

சென்னையின் நுழைவு வாயிலாக கருதப்படும் தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் மூன்று டிராக்குகள் மட்டுமே உள்ளன. இதில் தான் எக்ஸ்பிரஸ், மெமு ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏராளமான எக்ஸ்பிரஸ் ரயில்கள், சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருவதால் சென்னை முதல் செங்கல்பட்டு இடையே அதிக மெமு ரயில்களை இயக்க முடியவில்லை.

34
எக்ஸ்பிரசுக்காக மெமு ரயில்கள் தாமதம்

இப்போது இயக்கப்படும் சில மெமு ரயில்களும் எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு வழிவிடுவதற்காக ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு காலதாமதாக சென்னைக்கு சென்று வருவதால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் கடும் அவதி அடைந்து வந்தனர்.

இதனால் தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 4வது ரயில் பாதை அமைத்து சென்னை-தாம்பரம் மின்சார ரயில்களை செங்கல்பட்டு வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இதனால் 4வது வழித்தடம் அமைக்க தெற்கு ரயில்வே ரயில்வே வாரியத்திடம் ஒப்புதல் கேட்டிருந்தது.

44
4வது ரயில் பாதைக்கு ரயில்வே ஒப்புதல்

இந்நிலையில், பயணிகள் மகிழ்ச்சியடையும் விதமாக தாம்பரம்-செங்கல்பட்டு வழித்தடத்தில் 30.02 கிமீ துரத்துக்கு 4வது ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் அளித்துள்ளார். இந்த திட்டத்துக்கான தற்போதைய செலவு ரூ.714 கோடி மற்றும் மதிப்பீட்டு நிறைவுச் செலவு ரூ.757 கோடி ஆகும்.

சென்னை ரயில்களின் நேரம் குறையும்

ரயில்வே ஒப்புதல் அளித்துள்ளதால் மிக விரைவில் 4வது வழித்தடம் அமைக்கப்படும். இது முடிவடைந்தால் சென்னை டூ தாம்பரம் மின்சார ரயில்கள் செங்கல்பட்டு வரை நீட்டிப்பு செய்யப்பட அதிக வாய்ப்புள்ளன. மின்சார ரயில்களும் காலதாமதமின்றி இயக்கப்படும். மேலும் சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் பயண நேரமும் வெகுவாக குறையும்.

Read more Photos on
click me!

Recommended Stories