கனமழை காரணமாக நாளை தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 15ம் தேதி பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து வெளுத்து வாங்கி வருகிறது. சென்னையில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதேபோல் சென்னை புறநகர் மாவட்டங்களிலும், டெல்டா மாவட்டங்களிலும், கடற்கரை மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டி வருகிறது. கனமழை காரணமாக இன்று தமிழகத்தில் 12 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.
22
தருமபுரியில் பள்ளிக்கு விடுமுறை
இந்நிலையில், கனமழை காரணமாக நாளை (அக்டோபர் 23) தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். பள்ளிகள், அங்கன்வாடிகள் செயல்படாது என்று அவர் கூறியுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக நவம்பர் 15ம் தேதி பள்ளிகள் இயங்கும் என்று தருமபுரி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.