ரொம்ப நாள் லீவ் விட்டாச்சு.. இனி எல்லா சனிக்கிழமையும் பள்ளிகள் உண்டு - மாணவர்களுக்கு ஷாக் கொடுத்த அரசு!

First Published | Jul 19, 2024, 5:02 PM IST

Schools Run of Saturday : இந்த கல்வியாண்டில், பள்ளிகள் இனி சனிக்கிழமையும் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

pondy schools

புதுச்சேரியில் உள்ள அரசு பள்ளிகளில் அண்மையில் தான் சிபிஎஸ்சி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், இந்த 2024-25ம், கல்வியாண்டில் கடந்த ஏப்ரல் மாதம் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டது.

School Student : மாணவர்களுக்கு ஷாக் நியூஸ்.!அரை மணி நேரம் அதிகரிப்பு-புதிய அறிவிப்பை வெளியிட்ட கல்வித்துறை

Government Schools Pondy

ஆனால் பிற வருடங்கள் இல்லாத அளவிற்கு, இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகம் இருந்த காரணத்தினாலும், மொகரம் பண்டிகையை முன்னிட்டு புதுவை அரசு பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த காரணத்தினாலும், கடந்த ஏப்ரல் மாதம் முதல் இந்த ஜூலை மாதம் வரை சுமார் 12 வேலை நாட்களில் விடுமுறை விடப்பட்டுள்ளது.

Tap to resize

Government Schools

இந்நிலையில் அந்த 12 நாட்களில் திட்டமிடப்பட்டிருந்த பாடத்திட்டங்கள் முடிக்கப்பட வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில், அதை ஈடு செய்ய, எதிர்வரும் 12 சனிக்கிழமைகளில் கட்டாயம் பள்ளிக்கூடம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது புதுவை மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

pondicherry

இதுகுறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள புதுவையின் பள்ளி கல்வி இணை இயக்குனர் சிவகாமி, பள்ளிக்கூடம் நடைபெற உள்ள அந்த 12 சனிக்கிழமைகளில், என்னென்ன கிழமைகளுக்கான பாடத்திட்டம் பின்பற்ற வேண்டும் என்பதையும் அறிவித்துள்ளார்.

சூப்பர் திட்டம்.! மாணவர்களுக்கு 25ஆயிரம் ஊக்கத்தொகை.! விண்ணப்பிக்க அழைப்பு- தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

Latest Videos

click me!