10க்கும் மேற்பட்ட சிம்கார்டா.? உங்கள் பெயரில் எத்தனை சிம் இருக்கு தெரியுமா.? எப்படி செக் செய்வது- இதோ லிங்க்

First Published | Jul 19, 2024, 2:19 PM IST

10க்கும் மேற்பட்ட சிம்கார்டுகள் இருந்தால் சிறை தண்டனை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், தங்கள் பெயரில் எத்தனை சிம் கார்டுகள் உள்ளது என்பதை எளிதாக தெரிந்து கொள்ள முடிகிறது. அதற்கான லிங்கை மத்திய தொலை தொடர்பு துறை வெளியிட்டுள்ளது. 

புதிய சிம்கார்டுகள்- எண்ணிக்கை அதிகரிப்பு

நவீன யுகத்திற்கு ஏற்ப  தொலைதொடர்புகளும் வளர்ச்சி அடைந்து வருகிறது. அந்த வகையில் ஒருவர் பல மொபைல் போன்களை பயன்படுத்தி வருகின்றனர். மேலும் ஒரு தொலை தொடர்பில் சரியான சிக்னல் இல்லை, சரியான சலுகை கட்டணம் இல்லையென அங்கிருந்து வேறொரு நிறுவனத்தின் தொலை தொடர்புக்கு மாற்றப்படும் போது பழைய எண்களை விட்டு விட்டு புதிய எண்களுக்கு மாறுவார்கள்.

இதனால் பல சிம்கார்டுகள் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனை தடுப்பதற்காக ஒரே எண்ணை வைத்துக்கொண்டு போர்ட் முறையில் வேறொரு நிறுவனத்திற்கு மாற முடியும்.

பல சிம்கார்டுகள் பயன்படுத்த காரணம் என்ன.?

இருந்த போதும் குடும்ப சூழல், காதல் தோல்வி, கடன் பிரச்சனை உள்ளிட்ட காரணங்களுக்காக ஒருவர் பழைய எண்களை பயன்படுத்தாமல் புதிது,புதிதாக எண்களை மாற்றி பயன்படுத்தி வருகின்றனர். இது பெரிய அளவில் பாதிப்பு இல்லையென்றாலும் தீவிரவாத சம்பவத்தில் ஈடுபடுபவர்களும் பல எண்களை பயன்படுத்தி சதி வேலையில் ஈடுபடுகின்றனர்.

இதனை தடுக்கும் வகையில்  நம் நாட்டில் 2023 ஆம் ஆண்டின் தொலைத்தொடர்புச் சட்டத்தின்படி, ஒரு நபர் வைத்திருக்கக்கூடிய அதிகபட்ச சிம் கார்டுகளின் எண்ணிக்கையை கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. மேலும் இந்த விதிகளை மீறினால் கடுமையான அபராதம் அல்லது சிறைத்தண்டனை கூட ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Tap to resize

சிறை தண்டனை எச்சரிக்கை

நாடு முழுவதும், ஒரு நபருக்கு ஒன்பது சிம் கார்டுகளுக்கு வரம்பு அமைக்கப்பட்டுள்ளது. அந்த சிம் எண்ணிக்கையை மீறினால் தண்டனை வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.  இந்தநிலையில் ஒருத்தர் எத்தனை சிம் கார்டு பயன்படுத்துகிறார். தனது பெயரில் உள்ள சிம் எண்ணிக்கை எத்தனை என்பதை கண்டறிய மத்திய தொலை தொடர்பு துறை இணையதள முகவரியை வெளியிட்டுள்ளது. 

எத்தனை சிம் கார்டு பயன்படுத்துகிறோம் .?

அதன் படி, https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ என்ற லிங்கை கிளிக் செய்ய வேண்டும். அப்போது அந்த இணைய பக்கத்திற்கு செல்லும் அங்கு தற்போது பயன்படுத்தி வரும் தங்களது 10 இலக்க மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். இதனையடுத்து  Captcha Verify பண்ண வேண்டும். அப்போது நீங்கள் எந்த எண் கொடுத்துள்ளீர்களோ அந்த எண்ணிற்கு ஒரு ஓடிபி வரும். 

8th Pay Commission: மாநில அரசு ஊழியர்களை தொடர்ந்து மத்திய அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்!

எளிய முறையில் செக் செய்யலாம்

அந்த ஓடிபியை பதிவு செய்தால் உங்கள் பெயரில் உள்ள சிம்கார்டு லிஸ்ட் தெரியவரும். அதில் தாங்கள் மற்றும் தங்களது பெயரில் குடும்பத்தினர் மொபைல் எண்ணை செக் செய்யவும். அதில் எந்த எண்ணும் தங்கள் பயன்படுத்தவில்லையென்றால் Not My Number செலக்ட் பண்ணி Removal Request கொடுக்கலாம். இந்த லிங்க மூலம் எளிமையாக சிம் கார்டு பயன்படுத்தும் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளலாம். 

Tamilnadu Dam Water Level : தொடரும் மழை.! தமிழகத்தில் உள்ள அணைகளில் நீர் நிரம்பியதா.? நிலவரம் என்ன.?

Latest Videos

click me!