குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகையானது வருகின்ற பிப்ரவரி மாதம் முதல் ரூ.1000க்கு பதிலாக ரூ.2500ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மாநிலம் மாஹேவில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் ரூ.12 கோடியே 75 லட்சம் செலவில் 50 படுக்கைகள் கொண்ட 4 அடுக்கு மாடி கொண்ட உள் நோயாளிகள் பிரிவு கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா திங்கள் கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி உள்ளிட்டோர் காணொலி வாயிலாகக் கலந்து கொண்டனர்.
23
முதியோர் உதவி தொகையும் உயர்வு
விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, “தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதல் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பல நலத்திட்டங்கள் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் குடும்ப தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிர் உதவித் தொகை, முதியோர் உதவித் தொகை உள்ளிட்டவற்றை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
33
பிப்ரவரி முதல் அமல்..
அதன்படி குடும்ப தலைவிகளுக்கான மகளிர் உதவித் தொகையானது 150 சதவீதம் உயர்த்தப்பட்டு ரூ.1000க்கு பதிலாக ரூ.2500 வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று முதியோர் உதவித் தொகையும் ரூ.500 உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் வருகின்ற பிப்ரவரி 7ம் தேதி முதல் கிடைக்கும் வகையில் அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளதால் இல்லத்தரசிகள், முதியோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.