சென்னையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி இளம் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய கும்பல் சிக்கியுள்ளது. ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர் பெயரில் இயங்கி வந்த இந்த இடத்தில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி மூன்று பெண்களை மீட்டனர்.
தலைநகர் சென்னைக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் வேலை தேடி வருகின்றனர். அப்படி வேலை தேடி வரும் இளம் பெண்களை குறி வைக்கும் கும்பல் அவர்களிடம் தனியார் நிறுவனத்தில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருவதாக ஆசைவார்த்தை கூறி அவர்களிடம் மூளைச் சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
24
ஸ்பா மசாஜ் சென்டர்கள்
அதுமட்டுமல்லாமல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சட்டவிரோதமாக பல்வேறு இடங்களில் ஸ்பா மற்றும் மசாஜ் சென்டர்கள் இயங்கி வருகிறது. இந்த சென்டர்களில் ரகசியமாக பாலியல் தொழில் நடப்பது தெரியவந்ததும் போலீஸ் அதிரடி சோதனை நடத்தி கைது நடவடிக்கையும் மேற்கொண்டு வருகின்றனர். பாலியல் தொழிலில் ஈடுபட்ட பெண்களை மீட்டு காப்பகத்தில் ஒப்படைக்கப்படுகின்றனர்.
34
மசாஜ் சென்டர்

அங்கு, செங்கல்பட்டு மற்றும் ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த 25 வயது மதிக்கத்தக்க மூன்று பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரிந்தது. அரைகுறை ஆடைகளுடன் அவர்களை மீட்ட போலீசார் பெண்கள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, பீர்க்கன்காரணை பகுதியைச் சேர்ந்த விக்னேஸ்வரன் (36) அசாம் மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் (24) உள்ளிட்ட இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.