கரூரில் தவெக கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சோகத்தைத் தொடர்ந்து, தவெக தலைவர் விஜய் ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவித்தார். மேலும், தவெகவை சேர்ந்த மரிய வில்சன், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.5,000, ஆயுள் காப்பீடு.
கரூரில் தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. இந்த துயர சம்பவத்தில் பிரதமர் மோடி மற்றும் உலக நாடுகளிலும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு தமிழக அரசு ரூ.10 லட்சமும், மத்திய அரசு ரூ.2 லட்சதத்தை அறிவித்தது. ஆனால் தவெக கூட்டத்தில் பங்கேற்று உயிரிழந்த 41 குடும்பத்திற்கு விஜய் என்ன செய்ய போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்தது.
25
ரூ.20 லட்சம் நிவாரணம் அறிவிப்பு
இந்நிலையில் பாதிக்கப்பட்ட 41 குடும்ங்களுக்கும் ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தவெக தலைவர் பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களுக்கும் நேரில் சென்று ரூ.20 லட்சம் நிவாரணம் வழங்கவும் திட்டமிட்டுள்ளார். இதற்காக கரூர் மாவட்ட காவல்துறையிடம் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரி கடிதம் அளிக்கப்பட்டுள்ளது.
35
ஆதவ் அர்ஜுனா
அதுமட்டுமல்லாமல் டெல்லியில் தவெகவின் தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேட்டியளிக்கையில்: பாதிக்கப்பட்ட 41 குடும்பங்களையும் தத்தெடுத்து கொண்டு வாழ்நாள் முழுவதும் உடன் பயணிக்க உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் மரிய வில்சன் வெளியிட்ட அறிவிப்பு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதுதொடர்பாக தவெகவை சேர்ந்த மரிய வில்சன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்: நாங்கள் அறிவித்தபடி, கரூரில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டான பலன் சென்று சேரவேண்டும் என்பதற்காக ஒரு குழுவை அமைத்திருக்கிறேன். அக்குழு இன்று அவர்களை சந்திக்கிறது. ஏற்கனவே நான் அறிவித்தபடி, கல்வித் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்கிடவும், ஆயுள் காப்பீடு செய்து தரவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி 5,000 ரூபாயை ஒவ்வொரு மாதமும், பாதிக்கப்பட்ட குடும்பத் தலைவர்/தலைவியின் வாழ்நாள் முழுக்க வழங்க இருக்கிறேன். இன்று முதல் என் குழு செயற்பாட்டை ஆரம்பிக்கிறது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
55
யார் இந்த மரிய வில்சன்?
தமிழகத்தில் பிரபல கல்வி தந்தையாக விளங்கிய ஜேப்பியாரின் மருமகன் தான் மரிய வில்சன். எம்.ஜி.ஆர் வளர்த்து விட்ட கல்வியாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஜேப்பியார் கடந்த 2016ம் ஆண்டு மறைந்தார். இந்நிலையில் ஜேப்பியார் கல்வி நிறுவனங்கள் பலவற்றை வழிநடத்தி செல்லும் முக்கிய நபர் மரிய வில்சன் என்பது குறிப்பிடத்தக்கது.