இராமநாதபுரம் மற்றும் தேனி மாவட்டங்களில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. இராமநாதபுரத்தில் ஜூலை 26ம் தேதியும், தேனியில் ஆகஸ்ட் 2ம் தேதியும் நடைபெறும் இந்த முகாம்களில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
கல்வியை முடித்தும் படித்த படிப்பிற்கு உரிய வேலை கிடைக்காமல் பல இடங்களுக்கு பல லட்சம் பேர் வேலை தேடி செல்கிறார்கள். மேலும் சொந்த ஊரில் உரிய சம்பளம் இல்லாத காரணத்தாலும் பல இடங்களுக்கு வேலைக்காக இடம்பெயரும் நிகழ்வும் நடைபெறுகிறது.
இந்த நிலையில் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையில் வெளிநாட்டு தொழில்நிறுவனங்களோடு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தொழில் நிறுவனங்கள் பல இடங்களிலும் தொடங்கப்பட்டு வருகிறது. இதனால் சொந்த ஊரிலேயே வேலைவாய்ப்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாமை நடத்தி வருகிறது.
25
ராமநாதபுரத்தில் வேலைவாய்ப்பு முகாம்
நாளைய தினம் (ஜூலை 26ஆம் தேதி) மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், இராமநாதபுரம் மாவட்டம் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்,
தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் 26,07,2025, சனிக்கிழமை காலை 9,00 மணி முதல் மாலை 3.00 மணி வரை முகமது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி போக்குவரத்து நகர், இராமேஸ்வரம் மெயின் ரோடு, இராமநாதபுரம் வளாகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
35
சிறப்பு அம்சங்கள்
100 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
10000-க்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு இளைஞர்கள் (ஆண்கள் / பெண்கள்) தேர்வு செய்யப்பட உள்ளனர்
இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு மற்றும் ஆள்சேர்ப்பு நடைபெறும்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பாக தொழில்நெறி ஆலோசனைகள்
இதே போல தேனி மாவட்டத்தில் 02.08.2025 சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி, வடபுதுப்பட்டி, வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு அம்சங்கள்
125 க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் துறை நிறுவனங்கள்
8,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை விண்ணப்பம் மற்றும் போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பில் சேருவதற்கான விண்ணப்பம் வழங்குதல்.
இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலையளிப்போரோ வேலைநாடுநரோ எவ்வித கட்டணமும் செலுத்த தேவையில்லை என அன்புடன் தெரிவிக்கப்படுகிறது
55
கல்வித்தகுதிகள்
8-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை/ ஐ.டி.ஐ.,/ டிப்ளமோ/ நர்சிங் /பொறியியல்
வயது வரம்பு
18 வயது முதல்
40 வயது வரை.
அனுமதி இலவசம்
மேலும் விவரங்களுக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தேனி. தொலைபேசி எண்: 9894889794