தமிழ்நாட்டில் மதுரை, சென்னை, தஞ்சாவூர் போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாமல் கோவில்பட்டி, தென்காசி மற்றும் ராஜபாளையம் போன்ற சிறிய நகரங்களிலும் ஆர்த்தி ஸ்கேன் சென்டர் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புழல் பகுதியை சேர்ந்தவர் 47 வயது பெண். இவருக்கு கர்ப்பப்பை தொற்று இருந்து வந்ததை அடுத்து மருத்துவர்கள் அறிவுறுத்தலின் பேரில் கொளத்தூர் ரெட்டேரி பகுதியில் உள்ள ஆர்த்தி ஸ்கேன் மையத்தில் சி.டி.ஸ்கேன் எடுப்பதற்காக சென்றுள்ளார்.