நாளை முதல் மீண்டும் உயர்கிறது பால் விலை.! ஒரு லிட்டருக்கு இவ்வளவு உயர்வா.? வெளியான ஷாக் தகவல்

Published : Jan 31, 2025, 10:20 AM ISTUpdated : Jan 31, 2025, 10:23 AM IST

தமிழ்நாட்டில் திருமலா உள்ளிட்ட தனியார் பால் நிறுவனங்கள் பால் மற்றும் தயிர் விலையை உயர்த்தியுள்ளன. இதனால் தேனீர், காபி உள்ளிட்ட பால் சார்ந்த பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பால் முகவர்கள் சங்கம் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

PREV
16
நாளை முதல் மீண்டும் உயர்கிறது பால் விலை.! ஒரு லிட்டருக்கு இவ்வளவு உயர்வா.? வெளியான ஷாக் தகவல்
நாளை முதல் மீண்டும் உயர்கிறது பால் விலை

தமிழ்நாட்டில் சென்னையை தவிர்த்த பிற வெளி மாவட்டங்களில் பால் வணிகத்தில் ஈடுபட்டு வரும் சக்ரா, அர்ஜூனா உள்ளிட்ட பல முன்னணி தனியார் பால் நிறுவனங்கள் ஜனவரி மாதம் ஒவ்வொன்றாக பால் மற்றும் தயிர் விற்பனை விலையை உயர்த்தின.

இந்த நிலையில் சென்னை முதல் தென் மாவட்டங்கள் வரை கிளை பரப்பியுள்ள அண்டை மாநிலமான ஆந்திராவைச் சேர்ந்த முன்னணி தனியார் பால் நிறுவனமான திருமலா பால் நிறுவனமும், ஜெர்சி பால் நிறுவனமும் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் வரை உயர்த்த இருப்பதாக அறிவித்துள்ளது.
 

26
தனியார் பால் விலை உயர்வு

இதே போல தயிர் விற்பனை விலையை லிட்டருக்கு 5.00ரூபாய் வரையிலும் உயர்த்துவதாக பால் முகவர்களுக்கு சுற்றறிக்கை மூலம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி நிறைகொழுப்பு பால் (Full Gream Milk) 1லிட்டர் பாக்கெட் 70.00ரூபாயில் இருந்து 72.00ரூபாயாகவும், 500மிலி பாக்கெட் 36.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும்,  நிலைப்படுத்தப்பட்ட பால் (Standardized Milk) 1லிட்டர் பாக்கெட் 62..00ரூபாயில் இருந்து 64.00ரூபாயாகவும், 500மிலி பாக்கெட் 32.00ரூபாயில் இருந்து 33.00ரூபாயாகவும், சமன்படுத்தப்பட்ட பால் (Toned Milk) 1லிட்டர் பாக்கெட் 61.00ரூபாயில் இருந்து 62.00ரூபாயாகவும், 500மிலி பால் பாக்கெட் 27.00ரூபாயில் இருந்து 28.00ரூபாயாகவும், 

36
ஒரு லிட்டருக்கு எவ்வளவு உயர்வு.?

சமன்படுத்தப்பட்ட தயிர் (Toned Curd) 1கிலோ பாக்கெட் 70.00ரூபாயில் இருந்து 72.00ரூபாயாகவும், 450கிராம் பாக்கெட் 36.00ரூபாயில் இருந்து 37.00ரூபாயாகவும், இருமுறை சமன்படுத்தப்பட்ட தயிர் (Double Toned Curd) 1கிலோ பாக்கெட் 68.00ரூபாயில் இருந்து 70.00ரூபாயாகவும், 450கிராம் பாக்கெட் 33.00ரூபாயில் இருந்து 35.00ரூபாயாகவும் விற்பனை விலை மாற்றத்தை திருமலா பால் நிறுவனம் அறிவித்துள்ளது. பிற தனியார் பால் நிறுவனங்களும் பால், தயிர் விற்பனை விலையை அடுத்த சில தினங்களில் உயர்த்த இருப்பதாக தகவல் வருவதையொட்டி தமிழ்நாடு முழுவதும் தேனீர், காபி மற்றும் பால் சார்ந்த உணவுப் பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. 

46
விலை உயர்வை திரும்ப பெறுக

இதனிடையே தனியார் பால் விலை உயர்விற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் தலைவர் பொன்னுசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருமலா பால் நிறுவனத்தின் தன்னிச்சையான போக்கினை வன்மையாகக் கண்டிப்பதுடன் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும் இந்த விற்பனை விலை உயர்வு அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் எனவும்,

56
அத்தியாவசிய பொருட்களின் விலை உயர வாய்ப்பு

திருமலா பால் நிறுவனத்தை தொடர்ந்து பால், தயிர் விற்பனை விலையை உயர்த்த திட்டமிட்டுள்ள அனைத்து தனியார் பால் நிறுவனங்களையும் தடுத்த நிறுத்துமாறு தமிழ்நாடு அரசை தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்   வலியுறுத்துகிறது என தெரிவித்துள்ளார்,

மேலும் எனவே கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினுக்கான பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலையை  தமிழ்நாடு அரசு நிர்ணயம் செய்வது போல் பால் உற்பத்தியாளர்களிடமிருந்து பால் கொள்முதல் செய்யும் அண்டை மாநிலங்கள் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து தனியார் பால் நிறுவனங்களின் பால் கொள்முதலுக்கு குறைந்தபட்ச ஆதார விலையையும்,

66
பால் விலை உயர்வை கட்டுப்படுத்த சட்டம்

நுகர்வோர் பால் விற்பனைக்கான அதிகபட்ச சில்லறை விற்பனை விலையையும் அரசு நிர்ணயம் செய்திடவும், பால் கொள்முதல் விலையிலும், விற்பனை விலையிலும் தனியார் பால் நிறுவனங்கள் மாற்றங்கள் செய்வதாக இருந்தால் அரசின் அனுமதி பெற்ற பிறகே பால் கொள்முதல், விற்பனை விலை மாற்றத்தை அமுல்படுத்தும் வகையில் விதிமுறைகள் வகுத்து சிறப்பு சட்டம் இயற்றிட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!

Recommended Stories