Vegetable price in tamilnadu : காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்தால் உச்சத்தை தொடும், அதுவே சரிவை சந்தித்தால் காய்கறிகளை வாங்க கூட ஆள் இல்லாத வகையில் சாலையில் கொட்டப்படும். கடந்த சில மாதங்களுக்கு முன்பாக சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறியாக இருப்பது தக்காளி மற்றும் வெங்காயம், இதன் விலையானது புதிய, புதிய உச்சத்தை தொட்டது.
ஒரு கிலோ 100 முதல் 150 ரூபாய் வரை விலை உயர்ந்தது. இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பை நிறைய வாங்கி சென்ற மக்கள் அரை கிலோ, ஒரு கிலோ என்ற அளவிலேயே வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
Tomato And Onion Price Today
ஏறி இறங்கும் தக்காளி, வெங்காயம் விலை
ஆனால் அடுத்த சில வாரங்களிலேயே தக்காளி மற்றும் வெங்காயத்தின் வரத்து அதிகரித்ததால் விலை சரிய தொடங்கியது. லாரி, லாரியாக தக்காளி வெங்காயம் மற்றும் பச்சை காய்கறிகள் விற்பனைக்கு கோயம்பேடு உள்ளிட்ட காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்பட்டது.
ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனையான தக்காளி விலை தற்போது 100 ரூபாய்க்கு 8 கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதே போல வெங்காயத்தின் விலையும் சரிந்தது 100 ரூபாய்க்கு 4 முதல் 5 கிலோ வெங்காயம் விற்பனையாகிறது.
vegetables price list today
மூட்டை மூட்டையாக காய்கறிகள்
இது மட்டுமில்லாமல் பச்சை காய்கறிகளின் விலையும் சரிந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கூடை நிறைய காய்கறிகளை அள்ளிச்செல்கின்றனர். சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 15 முதல் 25 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 முதல் 50 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 25ரூபாய்க்கும்,
koyambedu market price list today
பச்சை காய்கறிகளின் விலை என்ன.?
குடைமிளகாய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 55 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. அவரைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
vegetable price list today
இஞ்சி விலை என்ன.?
பீன்ஸ் ஒரு கிலோ 50 முதல் 80 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் 40ரூபாய்க்கும், புடலங்காய் என்று 20 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது