பள்ளியில் சிரித்து பேசிக்கொண்டிருந்த மாணவி திடீரென உயிரிழப்பு! பதறிய தோழிகள்! கதறிய பெற்றோர்! நடந்தது என்ன?

Published : Apr 06, 2025, 06:02 PM ISTUpdated : Apr 06, 2025, 06:08 PM IST

தென்காசியில் 9-ம் வகுப்பு மாணவி பள்ளியில் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
14
பள்ளியில் சிரித்து பேசிக்கொண்டிருந்த மாணவி திடீரென உயிரிழப்பு! பதறிய தோழிகள்! கதறிய பெற்றோர்! நடந்தது என்ன?
School Student

சுரண்டை அரசு மேல்நிலைப் பள்ளி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே இரட்டைகுளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் பிரகாஷ் (40). இவர் கேரளாவில் சலூன் கடை  வைத்து நடத்தி வருகிறார். இவருடைய மனைவி மீனா (35). இந்த தம்பதிக்கு 14 வயதில் மானஷா என்ற மகள் இருந்துள்ளார். இவர் சுரண்டையில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். வீட்டில் இருந்து தினமும் பள்ளிக்கு சைக்கிளில் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார். 

24
School Student

வகுப்பறையில் மயங்கி விழுந்த பள்ளி மாணவி

இந்நிலையில் நேற்று முன்தினம் காலை மானஷா வழக்கம் போல தனது வீட்டில் இருந்து சைக்கிளில் பள்ளிக்குச் சென்றார். அங்கு வகுப்பறையில் சக மாணவிகளுடன் பேசி சிரித்து கொண்டிருந்த போது திடீரென மயங்கியுள்ளார். இதனை கண்டு சக மாணவிகள் ஆசிரியர்களிடம் கூறியுள்ளனர். இதனையடுத்து ஆசிரியர்கள் சுரண்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றனர். 

இதையும் படிங்க: காற்றழுத்த தாழ்வுப்பகுதி! விடாமல் வெளுத்து வாங்கப்போகுதாம் மழை? வானிலை மையம் சொல்வது என்ன?

34

108 ambulance 

மருத்துவமனையில் செல்லும் வழியிலேயே மாணவி உயிரிழப்பு

அங்கு மாணவிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உடல்நிலை மோசமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தினர். அதன்படி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் செல்லும் வழியிலேயே மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.

44
chennai police

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

இதுகுறித்து சுரண்டை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பள்ளிக்குச் சென்ற மாணவி திடீரென மயங்கி விழுந்து இறந்தது சுரண்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனாவுக்கு பிறகு அதிகளவில் பள்ளி மாணவர்கள் மற்றும் இளம் வயதினர் மாரடைப்பால் உயிரிழப்பது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories