கொளுத்தும் கோடையில்! தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா பாருங்க!

Published : May 14, 2025, 07:37 AM ISTUpdated : May 14, 2025, 07:41 AM IST

தமிழகத்தில் சுட்டெரிக்கும் கோடை வெயிலுக்கு இடையே மாதாந்திரப் பராமரிப்பு பணிகளுக்காக இன்று பல்வேறு மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

PREV
15
சுட்டெரிக்கும் கோடை வெயில்

தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் சுட்டெரித்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக பகல் நேரங்களில் வெப்ப காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும் கர்ப்பிணிகள் மற்றும் வயதானவர்கள் தேவையின்றி வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் சுகாதாரத்துறை தரப்பில் அறிவுறுத்தப்படுகிறது.

25
மாதாந்திரப் பராமரிப்பு பணி

இதனிடையே கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி முதல் தொடங்கிய நிலையில் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சுட்டெரிக்கும் கத்திரி வெயிலுக்கு இடையே மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக இன்று தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம்.

35
திருவாரூர் மாவட்டம்

உப்பூர், ஜாம்புவானோடை, வடகாடு, ஆலங்காடு, பச்சகுளம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்படும்.

45
சேலம் மாவட்டம்

தேவூர் அரசிராமணி அரியங்காடு, பேரமாச்சிபாளையம், கைகோல்பாளையம், வெள்ளாளபாளையம், ஓடசக்கரை, மயிலம்பட்டி, அம்மாபாளையம், அம்மாமரத்துகாடு வட்ராம்பாளையம், செட்டிபட்டி, குள்ளம்பட்டி, கணியாலம்பட்டி, புல்லாகவுண்டம்பட்டி, ரயில் நகர், பெரியார் நகர், ஜங்சன், ஆண்டிப்பட்டி, கபிலர் தெரு, பழைய சூரமங்கலம், சோளம்பள்ளம், அரியாகவுண்டம்பட்டி உள்ளிட்ட சுற்றுவட்டாரப்பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

55
திருச்சி மாவட்டம்

தங்கையாநகர், அன்பில்நகர், முல்லைநகர், வசந்தநகர், குறிஞ்சிநகர், உடையான்பட்டிரோடு, கல்யாணசுந்தரம்நகர், குளவாய்ப்பட்டி, காமராஜ்நகர், திருவளர்ச்சிப்பட்டி, காவேரிநகர், குடித்தெரு, வயர்லெஸ்ரோடு, புதுக்கோட்டை மெயின்ரோடு, அங்காளம்மன்தெரு, பசுமைநகர், சேலத்தார்நகர், மொராய்சிட்டி, செம்பட்டு, பயோநீர் என்ஜினீயரிங், மன்னை நாராயணன்தெரு, எஸ்.பி.ஐ.ஓ.ஏ.பள்ளி, வி.எம்.பி.டி.நகர், கிளாசிக் அவென்யூ, ராயல்பார்ம்ஸ், ராயல்வில்லா ஆகிய இடங்களில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories