Northeast Monsoon
கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய அடுத்து தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாக பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு மாவட்டங்களில் உள்ள நீர் நிலைகள் கிடுகிடுவென முழு கொள்ளவை எட்டி வருவதால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
Poondi Lake
இந்நிலையில் சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கம், பூண்டி 34.58 சதுர கி.மீ. பரப்பளவில் திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர் மட்ட மொத்த உயரம் 35 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3231 மில்லியன் கன அடியாகும். இன்று காலை 10.00 மணி நிலவரப்படி நீர் இருப்பு 34.99 அடியாகவும் கொள்ளளவு 3204 மில்லியன் கன அடியாகவும் மற்றும் பூண்டியின் நீர் வரத்து 15,500 கன அடியாக உள்ளது.
இதையும் படிங்க: Pongal Gift: ரேஷன் அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.1000 எப்போது கிடைக்கும்? வெளியான தகவல்!
Poondi Lake News
தற்போது அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நீர்வரத்து தொடர்ச்சியாக உள்ளதால் சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. அணைக்கு வரும் நீர் வரத்து 35 அடியை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுவதால் அணையின் வெள்ளநீர் வழிகாட்டுதலின்படி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்த்தேக்கத்திற்கு வரும் உபரி நீரை அணையின் பாதுகாப்பு கருதி நீர்த்தேக்கத்திலிருந்து இன்று காலை 6.30 மணி அளவில் விநாடிக்கு 12,000 கன அடி உபரி நீர் திறக்கப்பட்ட நிலையில், மேலும் இன்று காலை 10.30 மணி அளவில் விநாடிக்கு 16,500 கன அடியாக உபரி நீர் வெளியேற்றப்படும்.
Water released from Poondi Lake
எனவே நீர்த்தேக்கத்திலிருந்து மிகை நீர் வெளியேறும் கொசஸ்தலையாறு செல்லும் கிராமங்களான நம்பாக்கம், கிருஷ்ணாபுரம். ஆட்ரம்பாக்கம். ஒதப்பை, நெய்வேலி, எறையூர், பீமன்தோப்பு கொரக்கந்தண்டலம், சோமதேவன்பட்டு, மெய்யூர், வெள்ளியூர். தாமரைப்பாக்கம், திருக்கண்டலம். ஆத்துர், பண்டிக்காவனுர். ஜெகநாதபுரம். புதுகுப்பம். கன்னிப்பாளையம், வன்னிப்பாக்கம், அசூவன்பாளையம். மடியூர். சீமாவரம். வெள்ளிவாயல்சாவடி, நாப்பாளையம். இடையான்சாவடி, மணலி, மணலி புதுநகர். சடையான்குப்பம்.
இதையும் படிங்க: School Holiday: பொங்கலுக்கு முந்தைய நாள் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை! மொத்தம் 6 நாட்கள் லீவு!
Flood warning
மேலும் எண்ணுர் மற்றும் கொசஸ்தலையாற்றின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களுக்கு எச்சரிக்கை தருமாறும் மேலும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்களை பாதுகாப்பாக இருக்க தக்க நடவடிக்கை எடுக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.