பொங்கல் பண்டிகை! மூன்றே நாளில் சென்னையில் இருந்து இத்தனை லட்சம் பேர் அரசு பேருந்தில் பயணமா?

First Published | Jan 17, 2025, 9:15 PM IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு 44,580 சிறப்பு பேருந்துகளை இயக்கியது. சென்னையிலிருந்து மட்டும் 8.73 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளனர்.

Pongal Festival

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டது. ஒட்டு மொத்தமாக பொது மக்கள் வசதிக்காக 44,580 பேருந்துகள் இயக்கப்பட்டது. இந்நிலையில் நாள் தோறும் பல லட்சம் மக்கள் சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு புறப்படப்பட்டு சென்றனர்.  இந்நிலையில் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தின் மூலம் சென்னையிலிருந்து 8.73 இலட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Government bus

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 2025 பொங்கல் திருநாளை முன்னிட்டு, பொதுமக்கள் சிரமமின்றி தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்திடவும், பண்டிகை முடிந்து சென்னை மற்றும் பிற ஊர்களுக்கு திரும்பிடும் வகையில் சிறப்புப் பேருந்துகளை இயக்கிட முதலமைச்சர் உத்தரவிட்டார்கள்.

Tap to resize

Transport Department

பொங்கல் திருநாளை முன்னிட்டு போக்குவரத்துத்துறை அமைச்சர் அறிவிப்பின்படி, கடந்த  ஜனவரி 10 முதல் 13 ஆகிய 4 நாட்களில் சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 7,498 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 15,866 பேருந்துகள் இயக்கப்பட்டு. 8.73 இலட்சம் பயணிகள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர்.

Tamilnadu Government bus

பொங்கல் திருநாள் முடிந்த பின்னர். பிற ஊர்களிலிருந்து சென்னைக்கு வரும் பயணிகளின் வசதிக்காக 15 முதல் 19 வரையில், தினசரி இயக்கக்கூடிய 2,092 பேருந்துகளுடன் 5,290 சிறப்புப் பேருந்துகளும், ஏனய பிற முக்கிய ஊர்களிலிருந்து 6,926 பேருந்துகளும் என ஆக மொத்தம் 22,676 பேருந்துகள் இயக்கப்படும் என்பதனைத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Pongal Special

மேலும், 17 அன்று 28,022 பயணிகளும், 18ம் தேதியன்று 29,056 பயணிகளும் மற்றும் 19ம் தேதியன்று 42,917 பயணிகளும் பேருந்தில் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். எனவே, பயணிகள் கடைசி நேர கூட்ட நெரிசலில் பயணிப்பதை தவிர்த்து. தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு காலியாக உள்ள இருக்கைகளில் முன்பதிவு செய்து பயணிக்க அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Videos

click me!