பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டுவரணு வாக்குறுதி அளித்துவிட்டு இப்படி பண்ணலாமா? அமைச்சர் அறிவிப்புக்கு எதிர்ப்பு!

First Published | Jan 17, 2025, 6:50 PM IST

திமுகவின் தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படாததால் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

old pension scheme

திமுக தேர்தல் வாக்குறுதியாக தாங்கள் ஆட்சிக்கு வந்தால் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என அறிவித்திருந்தனர். இதனை நம்பி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திமுகவிற்கு வாக்களித்து வெற்றி பெற வைத்தனர்.  

Government employees

ஆனால் ஆட்சிக்கு வந்து 4 ஆண்டுகள் நிறைவு பெற்ற பிறகும் இதுதொடர்பாக திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது சாத்தியமில்லை என  கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: பழைய ஓய்வூதிய திட்டம்! வேறு வழியில்லாமல் நீதிமன்றம் படியேறிய ஆசிரியர்கள்! கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!

Tap to resize

Thangam Thennarasu

இதனிடையே அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது குறித்து சட்டப்பேரவையில் எம்எல்ஏ எழிலரசன் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு: மத்திய அரசு புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை (UPS or Unified Pension Scheme) அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய ஓய்வூதிய திட்டமானது அரசு பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுவதற்கு இது அடிப்படை நோக்கமாக கொண்டு இருக்கும் திட்டமாக உள்ளது. 

DMK Government

இந்த திட்டத்தின் செயலாக்கத்துக்கு உரிய வழிக்காட்டுதல்கள், விரிவான செயல்முறைகளை இன்னும் மத்திய அரசு வெளியிடவில்லை என்றார். மேலும் அவை கிடைத்ததும், நமது மாநிலத்திற்கு ஏற்ற ஓய்வூதிய திட்டத்தை வகுக்க முதல்வருடன் ஆலோசித்து புதிய குழு அமைக்கப்படும். இந்த குழுவின் பரிந்துரைகளின்படி, தமிழகத்தில் ஓய்வூதியத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த தேவையான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளும் என்று தெரிவித்திருந்தார்.  இந்நிலையில் பென்சன் வாங்கும் ஓய்வூதியதாரர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:  பள்ளி மாணவர்களுக்கு ரூ.10,000 உதவித்தொகை கொடுக்கும் தமிழக அரசு! எப்படி தெரியுமா?

Tamilnadu government

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்: திமுக ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியம் வழங்கப்படும் என கடந்த சட்டமன்ற தேர்தலின் போது வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் சட்டப்பேரவையில் கடந்த 11ம் தேதி ஓய்வூதியம் தொடர்பான குழு அமைக்கப்படும் என்ற நிதியமைச்சரின் அறிவிப்பு வேதனை அளிக்கிறது. 

MK Stalin

மத்திய அரசின் ஓய்வூதிய புதிய அறிவிப்பு நிலைப்பாடு தான் சரி என்று தமிழக அரசு ஏற்பது நியாயமற்றது. குழு அமைப்பது என்பது தாமதிக்க மட்டுமே பயன்படுகிறது. இது வாக்குறுதியை மீறிய செயலாகும்.  ழு அமைக்கும் நிதி அமைச்சரின் அறிவிப்பை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் மற்றும் சத்துணவு அங்கான்வாடி ஊழியர்களுக்கு கொடுத்த வாக்குறுதியை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos

click me!