சென்னை மட்டுமல்ல இந்த மாவட்டங்களில் மழை ஊத்தப்போகுதாம்! தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய தகவல்!

First Published | Jan 17, 2025, 8:20 PM IST

இன்றும், நாளையும் சென்னை உட்பட கடலோர தமிழ்நாட்டில் மழை பெய்யும் என பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

Northeast Monsoon

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே அதாவது கடந்த அக்டோபர் 15ம் தேதி தொடங்கியது. இதனால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் பரவலாக கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளும் நிரம்பி வழிகின்றன. இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பான அளவைவிடவும் அதிகமாக பெய்துள்ளது. கடந்த சில நாட்களாக சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவ்வப்போது விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

Tamilnadu Rain

இந்நிலையில் வடகிழக்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் பொதுவாக காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும் எனவும் திருநெல்வேலி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

Tap to resize

heavy rain

அதேபோல் நாளை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்றும், நாளை சென்னை உட்பட கடலோர தமிழ்நாட்டில் மழை பெய்யத் தொடங்கும் என  பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். 

tamilnadu weatherman pradeep john

இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை சென்னை உட்பட கடலோர தமிழ்நாட்டில் மழை பெய்யத் தொடங்கும். இந்த மேகமூட்டம் மழையை மட்டும் கொண்டு வராது, இரவில் வெப்பத்தைத் தடுத்து குறைந்தபட்ச வெப்பநிலையை அதிகரிக்கும். எனவே 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு முழுவதும் மழை நாட்களைக் காண்போம். இது சாதாரண மழையாக இருக்கும், ஆனால் மழை வருவதற்கு முன் அடுத்த 2 நாட்களில் அறுவடையை முடிக்குமாறு விவசாயிகள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Latest Videos

click me!