நான் பேசினது மொத்தமும் ரெக்கார்ட் பண்ணி இருக்காங்க.. அடுத்த குண்டை வீசிய ராமதாஸ்.. போலீசில் புகார்

Published : Aug 05, 2025, 09:40 AM ISTUpdated : Aug 05, 2025, 09:41 AM IST

 ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டதாக அன்புமணி மீது ராமதாஸ் குற்றம் சாட்டிய நிலையில் தொலைபேசியும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது 

PREV
14
ராமதாஸ்- அன்புமணி மோதல்

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் கடந்த சில மாதங்களாக தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது கூட்டணி அமைப்பதில் ராமதாஸ்- அன்புமணி இடையே மோதல் ஏற்பட்டது. 

இதனையடுத்து பாஜகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொண்ட பாமக, போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வியை பெற்றது. இதனையடுத்து ஜனவரி மாதம் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் தந்தை- மகன் இடையிலான மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. அடுத்ததாக ராமதாஸ் திடீரென தைலாபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, "இனி பாமகவின் தலைவர் நானே" என்றும், அன்புமணி செயல் தலைவராக மட்டுமே செயல்படுவார் என்றும் அறிவித்தார்.

24
பாமக நிர்வாகிகள் நீக்கம்

ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அன்புமணி, தான் பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் என்றும், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டவர் என்றும் பதிலடி கொடுத்திருந்தார். அடுத்ததாக ராமதாஸ் 19 பேர் கொண்ட நிர்வாகக் குழுவைக் கலைத்து, அன்புமணி மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்கி 21 பேர் கொண்ட புதிய குழுவை அமைத்தார். இதற்கு பதிலடியாக, அன்புமணி ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மற்றும் நிர்வாகிகள் ராமதாஸின் முடிவுகளை எதிர்த்து தனித்தனியாக செயல்பட்டனர்.

34
ராமதாஸ் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி

இதனையடுத்து அன்புமணியின் தனது செல்வாக்கை நிரூபிக்க "மக்கள் உரிமை மீட்பு நடைபயணம்" மேற்கொள்ள தொடங்கினார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்தார். அன்புமணி நடை பயணத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறியிருந்தார். இப்படி இருதரப்பிற்கும் இடையே மோதல் வலுத்துள்ள நிலையில், 

பாமக நிறுவனர் ராமதாஸின் விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் உள்ள வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி கண்டுபிடிக்கப்பட்டது இந்த கருவி, ராமதாஸ் வழக்கமாக அமரும் இருக்கையருகே பொருத்தப்பட்டிருந்ததாகவும், இது லண்டனில் இருந்து வாங்கப்பட்ட அதிநவீன கருவி எனவும் கூறப்பட்டது. மேலும் இந்த ஒட்டுக்கேட்பு கருவி தொடர்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

44
தொலைபேசி ஹேக் செய்யப்பட்டது

இந்த விவகாரத்தில், ராமதாஸ் தனது மகன் அன்புமணி மீது பரபரப்பு குற்றச்சாட்டு வைத்தார். மகனே தந்தையை ஒட்டுக்கேட்பது யாராவது கேள்வி பட்டிருப்போமா என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். மேலும் ராமதாஸ் வீட்டில் உள்ள சிசிடிவி கேமராக்கள் மற்றும் செல்போன் உரையாடல்கள் ஹேக் செய்யப்பட்டிருக்கலாம் எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த நிலையில் தனது வீட்டில் உள்ள தொலைபேசியும் ஹேக் செய்யப்பட்டுள்ளதாக காவல்நிலையத்தில் ராமதாஸ் தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வைபை மூலம் சட்டவிரோதமாக தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories