சென்னையில் நள்ளிரவில் பைக் ரேஸ்.! 35 இளைஞர்களை சுத்துப்போட்டு பிடித்த போலீஸ்
சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 35 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டதால் 25 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 35 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பைக் ரேஸில் ஈடுபட்டதால் 25 பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன.
Chennai Illegal bike racing : ரீல்ஸ் மோத்தால் பைக் சாகசம் செய்யும் இளைஞர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறார்கள். அந்த வகையில் பல லட்சம் மதிப்புள்ள விலை உயர்ந்த பைக்குகளோடு இளைஞர்கள் சாலையில் ரேஸ் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்த நிலையில் நேற்று இரவு சென்னையில் இளைஞர்கள் சிலர் பைக் ரேஸில் ஈடுபட உள்ளதாக காவல்துறைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி காவல்துறையினர் அண்ணாசாலை, ஸ்பென்சர் சிக்னல், ஜிபி ரோடு, மெரினா காமராஜர் சாலை போன்ற பல்வேறு பகுதிகளில் தடுப்புகள் அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சென்னையில் பைக் சாகசம்
அப்போது நள்ளிரவு நேரத்தில் போலீசாரின் கட்டுப்பாட்டையும் மீறி இளைஞர்கள் சிலர் சென்னையில் முக்கிய சாலைகளில் பைக் ரேஸ் மற்றும் சாகசங்களில் ஈடுபட்டனர். அண்ணா சாலை, தேனாம்பேட்டை, தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக கும்பல் கும்பலாக இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக செல்வது மேலும் அதிக சத்தத்தை எழுப்பும் வகையில் வாகனத்தை இயக்குவது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டனர்.
காவலர்களுக்கு காயம்
இதனை தடுக்க முயன்ற தேனாம்பேட்டை பகுதியில் உள்ள ஆகவல்ர்கள் மீதும் பைக்கானது மோதியுள்ளது. இதில் தேனாம்பேட்டை போக்குவரத்து உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் போக்குவரத்துக் காவலர் ரோகித் ஆகிய இருவரும் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
மேலும் பைக் ரேஸ் ஈடுபடும் நபர்களை சிசிடிவி காட்சிகளில் பைக் பதிவு எண்களை வைத்து காவல்துறையினர் கைது செய்து விடுவார்கள் என்ற காரணத்தால் இந்த கும்பல் நம்பர் பிளேட்டுகளில் துணி வைத்து மறைத்தும், நம்பர் பிளேட்டுகளை கழட்டி வைத்தும் சாமர்த்தியமாக பைக் ரேஸ் களில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.
35 பைக்குகளை பறிமுதல் செய்த போலீஸ்
இருந்த போதும் போலீசாரின் தீவிர நடவடிக்கையால் பைக் ரேஸில் ஈடுபட்ட சில இளைஞர்களை சுற்றி வளைக்கப்பட்டு காவல்துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டது. இதில் 35க்கும் மேற்பட்ட இளைஞர்களை சிறை பிடித்த போலீசார் 25 விலை உயர்ந்த பைக்குகளையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் சிசிடிவி காட்சிகள் மற்றும் வாகன பதிவு எண்களை அடிப்படையாகக் கொண்டு பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.