வேகமாக பைக் ஓட்டிய ரேபிடோ ஓட்டுநர்.! அலறிய பயணி மீது கொடூர தாக்கல்- ஷாக் கொடுத்த போலீஸ்
சென்னையில் ரேபிடோ ஓட்டுநர், பயணி ஒருவரை தாறுமாறாக பைக் ஓட்டியதை தட்டிக்கேட்டதால் தாக்கியுள்ளார். தலைக்கவசத்தால் தாக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்;
சென்னையில் ரேபிடோ ஓட்டுநர், பயணி ஒருவரை தாறுமாறாக பைக் ஓட்டியதை தட்டிக்கேட்டதால் தாக்கியுள்ளார். தலைக்கவசத்தால் தாக்கிய ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்;
Rapido bike driver arrested : சென்னையில் மட்டுமல்ல பல்வேறு நகரங்களில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக சாலையில் வாகனத்தை இயக்குவதே பெரும் சவாலான காரியமாக உள்ளது. இந்த நிலையில் தான் கால் டாக்ஸி புக் செய்து பயணம் செய்ய மக்கள் தொடங்கினர்.
இதன் அடுத்தக்கட்டம் தான் பைக் டாக்ஸி, ஒரே ஒருவருக்காக ஆட்டோ அல்லது காரில் செல்வதால் பல மடங்கு கட்டணம் கொடுக்க வேண்டும். எனவே பைக் டாக்ஸியில் குறைந்த கட்டணத்தில் குறித்த இடத்திற்கு செல்ல முடிகிறது. இதனால் இந்த சேவையை ஏராளமான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பைக் டாக்ஸி ஓட்டுநராக பார்ட் டைமாக வேலையாக ஏராளமானவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரேபிடோ இருசக்கர வாகனத்தை வேகமாக ஓட்டியதை தட்டிக்கேட்ட பயனாளரை கை மற்றும் தலைக்கவசத்தால் ரேபிடோ வாகன ஓட்டுநர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
சென்னை, நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜசேகர் என்பவர் திருவல்லிக்கேணியிலிருந்து நுங்கம்பாக்கம் செல்வதற்காக ரேபிடோ இருசக்கர வாகனத்தை ஆன்லைனில் பதிவு செய்து சிறிது நேரத்தில் கிதியோன் என்ற ரேபிடோ வாகன ஓட்டுநர் இருசக்கர வாகனத்துடன் வந்துள்ளார்.
இதனையடுத்து அந்த பைக்கில் ராஜசேகரை ஏற்றிச் செல்லும் போது, பைக் ஓட்டுநர் கிதியோன் தாறுமாறாக இருசக்கர வாகனத்தை ஓட்டி சென்று, அண்ணா சாலை, தலைமை தபால் அலுவலகம் செல்லும்போது, குறுக்கே சென்ற கர்ப்பிணி பெண்ணை இடிப்பது போல சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ராஜசேகர், இருசக்கர வாகனத்தை நிறுத்த சொல்லி உன்னுடைய ரைடை கேன்சல் செய்கிறேன் எனக் கூறியபோது,
கிதியோன் கையால் ராஜசேகரை தாக்கியுள்ளார். மேலும் தனது ஹெல்மெட்டால் தாக்கியபோது, அங்கு பணியிலிருந்த போக்குவரத்து போலீசார் மற்றும் பொதுமக்கள் கிதியோனை பிடித்து F-1 சிந்தாதிரப்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து தன்னை தாக்கிய நபர் மீது நடவடிக்கை எடுக்க குறித்து ராஜசேகரை புகார் கொடுத்துள்ளார். F-1 சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, வழக்குப் பதிவு செய்து, எதிரி கிதியோன், வ/36, த/பெ.அருள்தாஸ், அப்பையர் லேன், இராயபுரம், சென்னை என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து குற்றச் செயலுக்கு பயன்படுத்திய தலைக்கவசம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் கிதியோன் மீது ஏற்கனவே F-2 எழும்பூர் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட கிதியோன் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.