தமிழக சட்டமன்ற தேர்தல்.! களம் இறங்கியது தேர்தல் ஆணையம்- இன்று முக்கிய முடிவு.?
தமிழக தேர்தல் ஆணையம், 2026 தேர்தலை முன்னிட்டு கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது, குறைகளை கேட்டறிவது கூட்டத்தின் நோக்கம்.
தமிழக தேர்தல் ஆணையம், 2026 தேர்தலை முன்னிட்டு கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறது. தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்துவது, குறைகளை கேட்டறிவது கூட்டத்தின் நோக்கம்.
Election commission meeting : தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்து 4 வருடங்கள் முடிவடையவுள்ளது. இதனையடுத்து 2026ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்கள் மட்டுமே இருப்பதால் தேர்தல் ஆணையம் ஆரம்பக்கட்ட பணிகளை தொடங்கியுள்ளது.
அந்த வகையில் இவிஎம் இயந்திரங்களை சேமிப்பது, வாக்காளர் பட்டியலை சரி செய்வது. பெயர் நீக்கம், சேர்த்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அந்த வகையில் இன்று இந்திய தேர்தல் ஆணையத்தில் தமிழக தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தலைமையில் இன்று கூட்டம் நடைபெறவுள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள பழைய கூட்டரங்கில் நாளை மாலை 3மணிக்கு நடைபெறவுள்ள கூட்டத்தில் பங்கேற்குமாறு கட்சிகளுக்கு தேர்தல் துறை சார்பில் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அதன் படி, தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்த தமிழகத்திலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் ஆலோசனை நடத்தவுள்ளார். தேர்தல் நடைமுறைகளை வலுப்படுத்தவும், தேர்தலில் முக்கியப் பங்காளராக விளங்கும் அரசியல் கட்சிகளின் குறைகளைக் கேட்டறியவும் அனைத்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிகளை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் கோரியிருந்தது.
இதனையடுத்து தமிழகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்தி அதன்வழியே கருத்துகளைப் பெற தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் முடிவு செய்துள்ளார். இதற்காக இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் 12 உள்ளன. மாநிலக் கட்சிகளைப் பொறுத்தவரையில், திமுக, அதிமுக, தேமுதிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய நான்கு கட்சிகளும்,
தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக, மார்க்சிஸ்ட், ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ், தேசிய மக்கள் கட்சி ஆகிய ஆறு கட்சிகளும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிப்பட்டுள்ளன. இப்போது விடுதலைச் சிறுத்தைகள், நாம் தமிழர் ஆகிய இரண்டு கட்சிகளும் அந்தப் பட்டியலில் இணைந்துள்ளன. எனவே இன்றைய கூட்டத்தில் தேர்தல் தொடர்பாக முக்கிய ஆலோசனை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.