மத்திய அரசின் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா 3.0, பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்பு மற்றும் மானியம் வழங்குகிறது. விறகு, நிலக்கரி பயன்பாட்டைக் குறைத்து, பெண்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், ஏழை மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு பெரிய நிவாரணமாக மத்திய அரசின் பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா (PM Ujjwala Yojana 3.0) திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் மூலம் தகுதியுள்ள பெண்களுக்கு இலவச எல்பிஜி இணைப்பு, முதல் சிலிண்டர் வாங்க நிதியுதவி மற்றும் எரிவாயு மானியம் உள்ளிட்ட பல சலுகைகள் வழங்கப்படுகின்றன.
28
உஜ்வாலா யோஜனா 3.0 என்றால் என்ன?
பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனாவின் முக்கிய நோக்கம், விறகு, நிலக்கரி போன்ற பாரம்பரிய எரிபொருட்களை பயன்படுத்தும் குடும்பங்களை தூய்மையான எல்பிஜி சமையல் எரிவாயுவுக்கு மாற்றுவதாகும். இதன் மூலம் பெண்களின் உடல்நலம் பாதுகாக்கப்படுவதோடு, சமையல் பணியும் எளிதாகிறது. தற்போது செயல்பாட்டில் உள்ள உஜ்வாலா யோஜனா 3.0 மூலம் புதிய பயனாளிகளுக்கும் இலவச எல்பிஜி இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது.
38
என்னென்ன சலுகைகள் கிடைக்கும்?
இந்தத் திட்டத்தின் கீழ் தகுதியான பெண்களுக்கு,
இலவச LPG இணைப்பு
முதல் சிலிண்டர் மற்றும் ரெகுலேட்டருக்கான நிதியுதவி
எரிவாயு அடுப்பு வாங்க நிதி உதவி
ஒவ்வொரு தகுதியான சிலிண்டருக்கும் ரூ.300 வரை மானியம்
பின்வரும் நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் பெண்கள் இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.
18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட பெண்ணாக இருக்க வேண்டும். குடும்பத்தில் ஏற்கனவே LPG இணைப்பு இருக்கக்கூடாது.
பொருளாதார ரீதியாக நலிந்த குடும்பத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.
அரசின் தகுதி பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்.
58
முன்னுரிமை பெறும் குடும்பங்கள்
பின்வரும் பிரிவினருக்கு இந்தத் திட்டத்தில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
SC / ST குடும்பங்கள்
அந்த்யோதயா அன்ன யோஜனா (AAY) ரேஷன் அட்டைதாரர்கள்
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY) பயனாளிகள்
பழங்குடியினர் குடும்பங்கள்
தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடும்பங்கள்
தீவுப் பகுதிகளில் வசிப்பவர்கள்
புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் குடும்பங்கள்
அரசு அடையாளம் கண்ட ஏழை குடும்பங்கள்
68
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
விண்ணப்பிக்கும்போது பொதுவாக பின்வரும் ஆவணங்கள் தேவைப்படும்.
ஆதார் அட்டை
ரேஷன் கார்டு
வங்கி கணக்கு விவரம்
முகவரி சான்று பாஸ்போர்ட் அளவு புகைப்படம்
மொபைல் எண்
78
எப்படி விண்ணப்பிப்பது?
உஜ்வாலா யோஜனா 3.0-க்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அருகிலுள்ள LPG விநியோக மையத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். மேலும், அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து தேவையான ஆவணங்களுடன் சமர்ப்பிக்கவும் முடியும். விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பிறகு தகுதி உறுதி செய்யப்பட்டால் இலவச எல்பிஜி இணைப்பு வழங்கப்படும்.
88
இந்தத் திட்டத்தின் முக்கியத்துவம் என்ன?
உஜ்வாலா யோஜனா என்பது வெறும் இலவச எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் மட்டுமல்ல. விறகு, நிலக்கரி புகையால் ஏற்படும் சுவாச நோய்கள் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகளை குறைப்பதிலும், பெண்களின் சமையல் நேரத்தை மிச்சப்படுத்துவதிலும் இந்தத் திட்டம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், பெண்களின் பெயரிலேயே எல்பிஜி இணைப்பு வழங்கப்படுவதால், அவர்களின் சமூக மற்றும் பொருளாதார அதிகாரமளிப்புக்கும் இந்தத் திட்டம் உதவுகிறது.