DMK Vs TVK: பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா? திமுக ஐடி விங் காட்டம்! கோபாலபுர கொள்ளைக்காரர்களா நாங்க? தவெக பதிலடி!

Published : Jun 18, 2026, 10:03 AM IST

Vijay vs Udhayanidhi: முதல்வர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, மூன்று உயிரியல் பூங்காக்களுக்கு இலவச அனுமதி என வனத்துறை அமைச்சர் அறிவித்தார். இதைத் தவறாகப் புரிந்துகொண்ட திமுக, அரசுப் பணத்தை வீணடிப்பதாக விமர்சித்த நிலையில் தவெக பதிலடி.

PREV
15

தமிழக முதல்வரும், தவெக தலைவருமான ஜோசப் விஜய்யின் 52-வது பிறந்தநாள் வரும் ஜூன் 22-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் முதல்வர் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் முதலமைச்சர் ஜோசப் விஜய்பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், வரும் ஜூன் 21 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் ஜூன் 22 (திங்கள்கிழமை) ஆகிய இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் மூன்று முக்கிய வன உயிரியல் பூங்காக்களுக்கு பொதுமக்களுக்குக் கட்டணமில்லா இலவச அனுமதி வழங்கப்படுகிறது.

25

அதாவது செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா, வேலூர் மாவட்டம் அமிர்தி உயிரியல் பூங்கா, சேலம் மாவட்டம் குரும்பட்டி உயிரியல் பூங்காவில் பொதுமக்களுக்கு இரண்டு நாட்கள் இலவமாக செல்லலாம். இதற்கான முழு கட்டணத்தையும் எங்களது குடும்ப கட்டுப்பாட்டில் உள்ள வாழ்முனி நாயக்கர் குடும்ப அறக்கட்டளை செலுத்தும் என அறிவித்தார்.

35

இந்த பேட்டியை சரிவர பார்க்காமல் திமுகவின் ஐடிவிங் எக்ஸ் தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளது. அதில் உயிரியல் பூங்காக்கள் என்ன உங்க அப்பன் வீட்டுச் சொத்தா வனத்துறை அமைச்சர் ரஞ்சித் குமார் அவர்களே? நேற்று 'வெள்ளை அறிக்கை' விட்டு கஜானாவில் காசில்லை என்று கதறிய நீங்கள், இன்று 'இன்ஸ்டா அரசன்' விஜய்யின் பிறந்தநாளுக்காக வண்டலூர் உள்ளிட்ட பூங்காக்களுக்கு 2 நாட்கள் இலவச அனுமதி எனப் பல்லிளிப்பது ஏன்?

45

இந்த வருவாய் இழப்பை யார் ஈடுகட்டுவது? வாயில்லா ஜீவன்களின் உணவுக்கும், ஊழியர்கள் சம்பளத்துக்கும் யார் பொறுப்பு? முதல்வருக்குப் பிறந்தநாள் என்றால் உங்கள் கட்சி நிதியில காக்கா, அணிலுக்கு கேக் வெட்டி ஊட்டிவிடுங்கள். அதைவிட்டு மக்கள் வரிப்பணத்தில் கைவைக்க உங்களுக்கு என்ன தைரியம்? இந்த 'தத்தி' முதலமைச்சருக்கு ஒரு மண்ணும் தெரியாது என்ற துணிச்சலில் தான் அமைச்சர்களும், 'Shadow CM'ம் சேர்ந்து தமிழ்நாட்டை இப்படிச் சூறையாடுகிறீர்களா? என காட்டமாக கேள்வி எழுப்பியிருந்தனர்.

55

இதற்கு தவெக தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. நாங்கள் என்ன கோபாலபுரத்து கொள்ளைக்காரர்களா, அரசு பணத்தை வாரி வீட்டிற்கு கொண்டு போக? கடும் நிதிச்சுமையில் கூட கடலில் பேனா கட்டுவோம் என மக்கள் பணத்தை கரைக்க முயன்ற அறிவாலயம் க்ரூப் அல்ல நாங்கள். 10 ஆயிரம் ரூபாய் மட்டும் தான் கையிருப்பு என பொய் சொல்லி டிஃபெண்டரில் உலா வரும் உங்கள் முன்னாள் கொளத்தூர் எம்.எல்.ஏ., செய்யக்கூடிய வேலைகளை எல்லாம் எங்கள் தலையில் கட்டாதீர்கள் என விமர்சித்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories