மாலத்தீவு டூ தூத்துக்குடி: 4500 கோடியில் மெகா பிளான்! பிரதமர் மோடியின் தமிழ்நாடு விசிட் - என்ன ஸ்பெஷல்?

Published : Jul 26, 2025, 08:08 AM IST

பிரதமர் நரேந்திர மோடி 2 நாள் பயணமாக தமிழகம் வரவுள்ள நிலையில், தூத்துக்குடி, கங்கைகொண்ட சோழபுரம், தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

PREV
14
தமிழகத்தில் பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக மலத்தீவு சென்றுள்ள நிலையில், அங்கிருந்தபடி நேரடியாக 2 நாள் பயணமாக தமிழகம் வருகிறார். இந்தியாவின் தனி விமானம் மூலம் மாலத்தீவில் இருந்து தூத்துக்குடி வரும் பிரதமர் ரூ.452 கோடியில் விரிவு படுத்தப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். அதிநவீன வசதிகளுடன் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று இரவு 8 மணியளவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

24
பிரதமருக்கு பிரமாண்ட வரவேற்பு

விமான நிலையத்தில் பாஜக சார்பில் பிரமாண்ட வரவேற்பு அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதே போன்று முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டு பிரதமருக்கு உற்சாகர வரவேற்பு அளிக்கின்றனர். இதனைத் தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர், தமிழகத்தில் ரயில்வே துறை சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ள ரூ.1,032 கோடி மதிப்பிலான பணிகள், தேசிய நெடுஞ்சாலைத் துறை சார்பாக முடிக்கப்பட்டுள்ள ரூ.2,557 கோடி மதிப்பிலான பணிகளையும் பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

34
ரூ.4500 கோடியில் நலத்திட்டங்கள்

இதன் தொடர்ச்சியாக தூத்துக்குடி அணுமின் நிலையத்தில் ரூ.548 கோடியில் அமைக்கப்படவுள்ள மின்சார வெளியேற்றத்திற்கான மின் பரிமாற்ற அமைப்பு பணிகளுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார். மொத்தமாக ரூ.4500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார்.

44
விழாவில் முக்கிய பிரமுகர்கள்

இந்த விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி இரவு 9.30 மணியளவில் விமானம் மூலம் திருச்சி வந்தடைகிறார். பிரதமரின் வருகையால் தூத்துக்குடி மாநகரில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories