மலைக்கோட்டை நகரில் கெத்தாக கால்பதித்த பிரதமர் மோடி.. தமிழகத்துக்கு ரூ.5,655 கோடி 'மெகா' பரிசு!

Published : Mar 11, 2026, 06:03 PM IST

திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.5,655 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
ரூ.5,655 கோடி மதிப்பிலான திட்டங்கள்

பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 11) தமிழகம் வந்துள்ளார். கேரளாவின் கொச்சியில் நடந்த அரசு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, அங்கு இருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி வந்தார். பின்னர் திருச்சி பஞ்சப்பூரில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி ரூ.5,655 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். மேலும் நெல்லை மங்களூரு, ராமேஸ்வரம் மங்களூரு உள்ளிட்ட 4 ரயில்களின் சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு முக்கியமான நிகழ்ச்சி

பின்பு இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி, ''தமிழ் சகோதர, சகோதரிகளுக்கு வணக்கம். ஆவடி திருவாதிரை விழாவுக்காக கங்கைகொண்ட சோழபுரத்துக்கு வந்தேன். இந்த நிகழ்ச்சி தமிழ்நாட்டின் எதிர்காலத்துக்கு முக்கியமான ஒன்று. இந்த திட்டங்கள் மூலம் சிறந்த சாலைகள், குழாய் மூலம் எரிவாயு, வேலைவாய்ப்பு கிடைக்கும்.

எரிவாயு குழாய் இணைப்பு திட்டம்

370 கிமீ நீளமுள்ள சாலைகளை இன்று அர்ப்பணித்து வைத்துள்ளேன். புதிய சாலைகள் மூலம் நோயாளிகள் விரைந்து மருத்துவமனைக்கு செல்ல உதவும். இந்த சாலைகள் கிராமப்புற பொருளாதாரத்தை மேம்படுத்த உதவும். உலகின் மிகப்பெரிய ஆலைகளில் ஒன்றாக மசகு எண்ணெய் ஆலை இருக்கும். எரிவாயு குழாய் இணைப்பு மூலம் நீலகிரி, கோவையில் 9 லட்சம் குடும்பங்கள் பயனடையும். இயற்கை எரிவாயு 4 கோடி மரங்களை நடுவதற்கு சமமாகும்'' என்று தெரிவித்தார்.

Read more Photos on
click me!

Recommended Stories