வெளியான புதிய சர்வே.. தமிழகத்தை கைப்பற்றுவது யார்? கருத்துக்கணிப்பு முடிவுகள் இதோ

Published : Mar 11, 2026, 02:09 PM IST

ஐதராபாத்தைச் சேர்ந்த பாராவீல் நிறுவனம் தமிழக சட்டமன்றத் தேர்தல் குறித்து ஒரு விரிவான கருத்துக்கணிப்பை வெளியிட்டுள்ளது. இளைஞர்கள் மற்றும் முதல்முறை வாக்காளர்கள் மத்தியில் தவெகவுக்கு ஆதரவு அதிகரித்து வருவதாக இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

PREV
16
தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு

தமிழகத்தில் நடைபெறவுள்ள அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், புதிய கருத்துக்கணிப்பு ஒன்று அரசியல் வட்டாரங்களில் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஐதராபாத்தைச் சேர்ந்த தேர்தல் ஆய்வு மற்றும் அரசியல் நுண்ணறிவு நிறுவனமான கே.கே. சர்வேஸ் அண்ட் ஸ்ட்ரேட்டஜிஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான பாராவீல் (Parawheel) நிறுவனம் இந்த விரிவான கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது. தமிழகத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் வாக்குச்சாவடி அளவிலான தரவுகளை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

26
70 லட்சம் வாக்காளர்கள் கருத்து

தமிழகம் முழுவதும் குறைந்தபட்சம் ஒரு தொகுதிக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் கருத்துகளை சேகரித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 70 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களிடம் இருந்து தகவல்கள் பெறப்பட்டுள்ளன. வாக்காளர் மனநிலை, வாக்குச்சாவடி அளவிலான கள ஆய்வு மற்றும் தரவு சார்ந்த அரசியல் பகுப்பாய்வு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த கணிப்பு தயாரிக்கப்பட்டதாக நிறுவனம் விளக்கியுள்ளது.

36
தமிழக தேர்தல் கருத்துக்கணிப்பு முடிவுகள்

இந்த ஆய்வின் முதற்கட்ட முடிவுகளின்படி, தி.மு.க. கூட்டணி சுமார் 41.5 சதவீத வாக்கு விகிதம் பெறும் என கணக்கிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி 36.2 சதவீதம், தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) 13.6 சதவீதம், மற்றும் நாம் தமிழர் கட்சி 7.9 சதவீதம் வாக்குகளைப் பெறும் வாய்ப்பு இருப்பதாக அந்த நிறுவனம் உள்ளது. கூறினார்.

46
தவெக கருத்துக்கணிப்பு

இந்த கருத்துக்கணிப்பின் மற்றொரு அம்சமாக, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (TVK) மாநில அரசியலில் மூன்றாவது முக்கிய அரசியல் சக்தியாக உருவெடுக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னை உள்ளிட்ட சில நகர்ப்புற தொகுதிகளில் அந்தக் கட்சி கனிசமான ஆதரவைப் பெற்றுள்ளதாக ஆய்வுத் தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

56
பராவீல் நிறுவனத்தின் சர்வே

பராவீல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிரண் கொண்டெட்டி, தேர்தல் முடிவுகளை தீர்மானிப்பதில் முதன்முறை வாக்காளர்கள், பெண் வாக்காளர்கள் மற்றும் கடைசி நேரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய தொகுதிகள் முக்கிய பங்கு வகிப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இளைஞர்களிடையே உருவாகும் அரசியல் மனநிலையும் இதில் கவனத்தில் கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

66
தேர்தல் கணிப்பு வெளியீடு

மேலும், நடிகர் விஜயின் அரசியல் வருகை குறித்து தனிப்பட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. ரசிகர்கள் வாக்காளர்களாக மாறும் நிலை, இளைஞர்களை ஈர்க்கும் திறன் மற்றும் இது தி.மு.க., அ.தி.மு.க. போன்ற பெரிய கட்சிகளின் வாக்கு வங்கியில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் ஆகியவை ஆராயப்பட்டதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories