12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்தம் பணி தொடங்கியது! பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?

Published : Apr 04, 2025, 11:33 AM ISTUpdated : Apr 04, 2025, 11:36 AM IST

தமிழ்நாட்டில் 12, 11ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும்? விடைத்தாள் திருத்தும் பணி எப்போது தொடங்குகிறது? முழு விவரம் உள்ளே.

PREV
14
12-ம் வகுப்பு மாணவர்களின் தேர்வு விடைத்தாள் திருத்தம் பணி தொடங்கியது! பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது?

12ம் வகுப்பு பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி தொடங்கி 25-ம் தேதி நிறைவடைந்தது. இந்த தேர்வினை 7518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர். 

24
public exam

11ம் வகுப்பு பொதுத்தேர்வு

அதேபோல் 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5ம் தேதி தொடங்கி 27ம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வினை 7,557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும், 4755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதி உள்ளனர். தற்போது 10ம் வகுப்பு தேர்வு மார்ச் 28 தொடங்கிய நிலையில் ஏப்ரல் 15 வரை நடைபெற உள்ளது.

இதையும் படிங்க: இது தான் லாஸ்ட் வார்னிங்! ஆசிரியர்கள் மட்டுமல்ல தலைமை ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!

34
Exam paper

12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி

இந்நிலையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி இன்று தொடங்கி ஏப்ரல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்துதல் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 46,000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட உள்ளனர். அதன் பின்னர் மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து, திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 9-ம் தேதி வெளியாக உள்ளது. 

இதையும் படிங்க:  இரண்டு நாட்கள் விடுமுறை! குஷியில் துள்ளி குதிக்கும் பள்ளி மாணவர்கள், அரசு ஊழியர்கள்!

44

11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு

மேலும் 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பீட்டுப் பணிகள் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 30-ம் தேதி வரை நடக்க உள்ளது. தேர்வு முடிவுகள் மே 19ம் தேதி வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories