TN Govt to Enable Online Booking for Government Buses via E-Sevai : தமிழகத்தில் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக பல்வேறு வசதிகளோடு அரசு பேருந்துகள் தமிழகம் முழுவதும் இயக்கப்படுகிறது. கட்டணமும் தனியார் பேருந்துகளை விட குறைவாக உள்ளது. எனவே விடுமுறை நாட்கள், விஷேச நாட்களில் தனியார் பேருந்துகள் பல மடங்கு கட்டணத்தை உயர்ந்தி வாங்கும் போது குறைவான கட்டணத்தில் தரமான சேவையை அரசு போக்குவரத்து கழகம் செயல்படுத்தி வருகிறது.
அடுத்தடுத்து 2 நாள் தொடர் விடுமுறை.! சுற்றுலா பயணிகளுக்கு போக்குவரத்து துறை குஷியான அறிவிப்பு
அரசு பேருந்துக்கான டிக்கெட் முன்பதிவு
ஆனால் அரசு பேருந்துகளில் டிக்கெட் முன்பதிவு செய்ய முக்கிய பேருந்து நிலையங்கள் அல்லது ஆன்லைன் செயலி மூலம் மட்டுமே டிக்கட் டிசர்வேஷன் செய்ய முடியும். இதன் காரணமாக கிராமப்புறங்களில் உள்ள மக்கள் அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்காக வெளியூர் சென்று முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதன் கருத்தில் கொண்டு இ-சேவை மையங்களில் அரசு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது.
விரைவில் இ சேவை மையங்களில் பேருந்து டிக்கெட்
எனவே விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ள டிக்கெட் முன்பதிவு தொடர்பான திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டில் உள்ள 530-க்கும் மேற்பட்ட இ-சேவை மையங்கள் மூலம் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம். இதன் காரணமாக கிராமப்புற மக்கள் பயனடையும் வகையில் இ-சேவை மையங்கள் மூலம் அரசு பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.