இலவச வீட்டு மனை பட்டா.! எதிர்பார்த்து காத்திருந்த பொதுமக்களுக்கு தமிழக அரசு அசத்தலான அறிவிப்பு

தமிழக சட்டமன்றத்தில் வருவாய் மற்றும் பேரிடர் துறையின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. புதிய அலுவலக கட்டடங்கள், பேரிடர் மேலாண்மை கருத்தியல் தளம், கல்லூரி பாடத்திட்டத்தில் பேரிடர் மேலாண்மை பாடம், புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கம் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

New notifications Revenue Department : தமிழக சட்டமன்றத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பல்வேறு துறையின் கீழ் செயல் படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் நிலை, புதிய திட்டங்கள், நிதி ஒதுக்கீடு என பல அறிவிப்புகளை வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில் வருவாய் மற்றும் பேரிடர் துறையின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி

மதுரை மாவட்டத்தில் 76 வருடங்கள் பழமை வாய்ந்த மதுரை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், நீலகிரி மாவட்டத்தில் 60 வருடங்கள் பழமை வாய்ந்த கூடலூர் வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டத்தில் 110 வருடங்கள் பழமை வாய்ந்த அரக்கோணம் வட்டாட்சியர் அலுவலகம் ஆகிய 3 அலுவலகங்களுக்குப் புதிய கட்டடங்கள் ரூ.13.90 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.  

பேரிடர் மேலாண்மை பாடம் அறிமுகம்

மாநிலத்தில் பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளை செம்மைப்படுத்துவதற்காக நிபுணர்கள்,  ஆராய்ச்சி அமைப்புகள், தன்னார்வ அமைப்புகள் மற்றும் நிருவாகத் துறைகளைக் கொண்டு ஒரு “கருத்தியல் தளம்” அமைக்கப்படும்.

கல்லூரிகளில் இளங்கலைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பேரிடர் மேலாண்மை குறித்த பாடம் அறிமுகப்படுத்தப்படும். மேலும், பள்ளிகளில் ஏற்கெனவே உள்ள பேரிடர் மேலாண்மை பாடத்திட்டம் புதுப்பிக்கப்படும்.

38 மாவட்ட நிலஅளவை அலுவலகங்கள் மற்றும் நான்கு மண்டல நிலஅளவை அலுவலகங்களுக்கு, பொதுமக்களுக்கு நில ஆவணங்களை விரைவாக வழங்கும் பொருட்டு 42 ஒளிபிம்ப நகலெடுக்கும் கருவிகள் ரூ.65 இலட்சம் மதிப்பீட்டில் வழங்கப்படும்.


3,078 நிலஅளவைப் பணியாளர்களுக்கு மடிக்கணினி

 பேரிடர் மேலாண்மை குறித்து கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்களது பங்கேற்பை ஊக்குவிக்கவும் இளங்கலைப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பேரிடர் மேலாண்மை குறித்த பாடம் வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்படும். மேலும், ஏற்கெனவே பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை உள்ள பேரிடர் அபாயக் குறைப்புப் பாடத்திட்டம், விரிவுபடுத்தப்பட்டு புதுப்பிக்கப்படும்.

இணைய வழி பட்டா மாறுதல் திட்டத்தினை விரைவாகவும், சிறப்பாகவும் செயல்படுத்தும் பொருட்டு, நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட துறையில் பணிபுரியும் 3,078 நிலஅளவைப் பணியாளர்களுக்கு ரூ.15.60 கோடி மதிப்பீட்டில் தரவு அட்டைகளுடன் கூடிய மடிக்கணினிகள் வழங்கப்படும்.
 

50 புதிய வருவாய் குறுவட்டங்கள்

மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் அதிகரித்து வரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டும், அரசின் நலத்திட்டங்கள் மக்களை விரைவாகச் சென்றடைவதற்கும் சென்னை, செங்கல்பட்டு, சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, திருவண்ணாமலை, ஈரோடு, திருப்பத்தூர், திண்டுக்கல், கடலூர், தஞ்சாவூர், திருப்பூர் மற்றும் விழுப்புரம் ஆகிய 17 மாவட்டங்களில் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும்.

சென்னை மாவட்டத்தில் 14 வருவாய் குறுவட்டங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 வருவாய் குறுவட்டங்கள், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 5 வருவாய் குறுவட்டங்கள் என ஆக மொத்தம் 50 புதிய வருவாய் குறுவட்டங்கள் உருவாக்கப்படும். 

25 புதிய வருவாய் கிராமங்கள்

பொதுமக்களுக்கு வருவாய்த் துறையின் சேவைகளை விரைவாக வழங்கும் பொருட்டு, செங்கல்பட்டு, சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, திண்டுக்கல் மற்றும் திருவண்ணாமலை ஆகிய 8 மாவட்டங்களில் மொத்தம் 25 புதிய வருவாய் கிராமங்கள் உருவாக்கப்படும்.

வட்ட அளவில் வருவாய்த் துறையின் நிருவாகத்தை வலுப்படுத்தி பொதுமக்களுக்கு வருவாய்த் துறையின் சேவைகளை விரைவாக  வழங்கும் பொருட்டு 26 துணை வட்டாட்சியர் பணியிடங்கள் புதியதாக தோற்றுவிக்கப்படும். 

கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் வீட்டு மனை இல்லாத தகுதிவாய்ந்த பயனாளிகளுக்கு பூமிதான நிலங்களில் இலவச வீட்டுமனை விநியோகப் பத்திரம் வழங்கப்படும். 

இலவசமாக வீட்டுமனை விநியோகப் பத்திரம்

கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட வீட்டு மனை இல்லாத பயனாளிகளுக்கு அந்தந்த மாவட்டத்திலுள்ள பூமிதான நிலங்களில் தகுதியான நிலங்களைத் தேர்வு செய்து, பூமிதான யக்ஞச் சட்ட விதி 19(1)-இன் கீழ் இலவசமாக வீட்டுமனை விநியோகப் பத்திரம் வழங்கப்படும்.

மனைவரி விதிக்கப்பட்ட இடங்களில் வருவாய் பின்தொடர் பணிகளை மேற்கொண்டு 10,000 குடும்பங்களுக்கு பட்டாக்கள் வழங்கப்படும். தமிழ்நாடு முழுவதும் எஸ்டேட், இனாம் போன்ற பல்வேறு ஒழிப்புச் சட்டங்களின் கீழ் நிலவரித்திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு மனைவரி பதிவேடுகள் தயார் செய்யப்பட்ட 40 கிராமங்களில் வருவாய் பின்தொடர் பணிகளை மேற்கொண்டு, தகுதியான 10,000 குடும்பங்களுக்கு, இரயத்து மனைகளாக வகைப்பாடு மாற்றம் செய்து, வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படும். 

நிலவரித் திட்டப் பணிகள்

 கன்னியாகுமரி மாவட்டம், அகஸ்தீஸ்வரம் வட்டத்தில், ஆறு வருவாய் கிராமங்களில் உள்ள 31,117 பயனாளிகளுக்கு நிலவரித் திட்டப் பணிகளை மேற்கொண்டு பட்டாக்கள் வழங்க ரூ.84.47 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

Latest Videos

click me!