சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றும், பெரும்பான்மை இல்லாததால் விஜய்யின் தவெக ஆட்சி அமைக்க முடியவில்லை. ஆளுநர் அழைப்பு விடுக்காத நிலையில், தனிப்பெரும் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தும் பெருபான்மை இல்லாததால் ஆட்சி அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இந்நிலையில் 5 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த 4 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்ததை அடுத்து எண்ணிக்கை 117 உயர்ந்துள்ளது. இன்னும் பெருபான்மைக்கு 2 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவை கேட்டுள்ளார்.
24
உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல்
இதனிடையே விஜய் 3 முறை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார். ஆனால் பெருபான்மை இல்லை என்று கூறி விஜய்யை ஆட்சியமைக்க அழைக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார். இந்நிலையில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்க ஆளுநருக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் எழிலரசி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
34
காலம் தாழ்த்தி வரும் ஆளுநர்
அதில் 234 இடங்களைக் கொண்ட தமிழகச் சட்டசபையில் 108 இடங்களைப் பெற்று தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. இதனால் ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரப்பட்டது. ஆனால் பெருபான்மை இல்லை என்று கூறி ஆட்சியமைக்க அழைப்பு விடாமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகிறார். அரசியலமைப்புச் சட்டத்தின்படி தனிப்பெரும் கட்சியான எங்கள் தலைவரையே ஆளுநர் முதலில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும்.
ஒரு கட்சிக்குத் தேவையான பெரும்பான்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஆளுநர் மாளிகையில் முடிவு செய்யக்கூடாது. அதை சட்டசபையில்தான் நிரூபிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் உறுதிப்படுத்தி உள்ளன. ஏற்கனவே ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள தவெக தவிர்த்து வேறு எந்தவொரு அரசியல் அமைப்பையும் ஆட்சி அமைக்க அழைக்காதவாறு ஆளுநருக்கு தடை விதிக்கும் இடைக்கால உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ராமசுப்பிரமணியனும் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.