கரூர் கூட்டநெரிசல் தொடர்பான விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இடைக்கால தீர்ப்பை மட்டுமே வழங்கி உள்ளது. மேலும் தமிழக அரசு நியமித்த தனிநபர் ஆணையத்தின் விசாரணைக்கு தடை இல்லை என்றும் வழக்கறிஞர் வில்சன் விளக்கம்.
கடந்த மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள், பெண்கள் உட்பட 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அசம்பாவிதம் தொடர்பாக சிபிஐ மேற்பார்வையில் உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.
24
அருணா ஜெகதீசன் விசாரணை தொடரும்..
இதனைத் தொடர்ந்து மூத்த வழக்கறிஞரும், திமுக எம்.பி.யுமான வில்சன் நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “கரூர் கூட்டநெரிசல் வழக்கை சிபிஐக்கு மாற்றியிருப்பது இடைக்கால உத்தரவு மட்டும் தான். நிரந்தர உத்தரவு கிடையாது. இச்சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையத்தின் விசாரணை தொடரும். சிற்பபு புலனாய்வுகுழு தற்போது வரை என்ன விசாரித்தார்களோ அதனை ஆணையத்தில் ஒப்படைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
34
இடைக்கால உத்தரவு
மேலும் இந்த வழக்கில் இரண்டு நபர்கள் தங்கள் அனுமதி இன்றி போலியாக ஒரு மனுவை தாக்கல் செய்துள்ளதாக புகார் அளித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தனியாக மனு தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஒருவேளை அந்த மனுக்கள் போலியானதாக தாக்கல் செய்யப்பட்டு இருந்தால் தற்போதைய உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்து சிபிஐ கிரிமினல் வழக்காக பதிவு செய்து விசாரிக்கும்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பயனும் இல்லை. நெரிசல் வழக்கில் இறுதி உத்தரவு என்ன என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். கரூர் நெரிசல் வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தமிழக அரசு அழுத்தம் கொழுத்து உத்தரவை பெற்றதாக ஆதவ் அர்ஜூனா கூறியது நீதிமன்ற அவமதிப்பு” என்று குறிப்பிட்டுள்ளார்.