எலியிடம் தப்பி புலியிடம் மாட்டிக் கொண்ட விஜய்..! தீர்ப்புக்குப் பிறகு தெறிக்கவிடும் சோசியல் மீடியா கமெண்ட்ஸ்

Published : Oct 13, 2025, 01:20 PM IST

கரூரில் தவெக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த , விஜய் எலியிடம் இருந்து தப்பி புலியிடம் சிக்கிக்கொண்டதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

PREV
13

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அரசியல் களத்தில் புதிதாக இறங்கியுள்ள நடிகர் விஜய், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மக்களை சந்திக்கும் வகையில் பிரச்சார கூட்டங்களை நடத்த . அந்த வகையில் திருச்சி, அரியலூர், நாகை, திருவாரூர், நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் பிரச்சாரங்களை நடத்தினார். 

இதனை தொடர்ந்து கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாட்டையே அதிர்ச்சி அடைய செய்தது. இந்த சம்பவத்தையடுத்து தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். அக்கட்சி பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் சிடி நிர்மல்குமார் எந்த நேரமும் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

23

இந்த சூழ்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு விசாரணை குழுவிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தவெக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவில் தமிழக போலீசார் மீது குற்றம்சாட்டப்பட்ட நிலையில் அதே போலீசார் வழக்கை விசாரித்தால் எப்படி நியாயம் கிடைக்கும் என கேள்வி எழுப்பி சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை விடப்பட்டது. 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஜே.கே. மகேஸ்வரி மற்றும் என்.வி. அஞ்சரியா தலைமையிலான அமர்வு கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது. மேலும் சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட அஜய் ரஸ்தோகி தலைமையில் SIT குழு அமைத்தும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

33

இந்த நிலையில் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில், விஜய் எலியிடம் இருந்து தப்பி புலியிடம் மாட்டிக்கொண்டதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள். தவெக எலி பூனையிடம் தப்பி பாம்பிடம் தஞ்சம் புகுந்துள்ளது, முடிந்தது விஜய் அரசியல் சகாப்தம் பிஜேபிக்கு இன்னொரு அடிமை தயார் 

இனி tvk கட்சி பிஜேபிக்கு சொம்பு தூக்கியே ஆகணும், கொள்கை எதிரியை இப்போ விமர்சனம் செய்ய சொல்லுங்க பார்ப்போம் எனவும், எலி வாலை விட்டுட்டு புலி வாலை பிடித்த அணில் இனி தப்பவே முடியாது என சமூக வலைதளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள்.

Read more Photos on
click me!

Recommended Stories